For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று மழை நீர் புகுந்த வீடெல்லாம் முன்பு நீர் நிலைகளின் பிறந்த வீடாக இருந்திருக்கும்.. #சென்னை_மழை

Google Oneindia Tamil News

சென்னை: மழை குறித்தும் நீர்நிலைகளின் தற்போதைய நிலை குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையிலும் வெளுத்து வாங்கி வருகிறது. பருவமழை தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னையில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக கொட்டித் தீர்த்துள்ளது.

ஆனால் நேற்றிரவு முதல் சென்னையில் மழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை மழை குறித்தும் நீர்நிலைகள் குறித்தும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருக்கற இடத்துல பெய்வியா..

மழை: யோவ் இங்க இருந்த வாய்க்கால், ஏரிலாம் எங்கயா??
சென்னை பீப்புள்ஸ்: ஆமா இவரு வர வரைக்கும் வச்சிருப்பாங்களா, இருக்கற இடத்துல பெய்துட்டு போவியா... என்கிறது இந்த டிவிட்..

தண்ணி போகுது..

தண்ணி போக வேண்டிய இடத்துல லாரி போகுது, லாரி போக வேண்டிய இடத்துல தண்ணி போகுது.
#மணல் #சென்னைமழை என்கிறது இந்த டிவிட்..

வெள்ளத்திலாவது ஓடுச்சுங்களா?

அடிக்கடி தேசிய நீரோட்டம் தேசிய நீரோட்டம்னு அரசியல்வாதிங்க சொல்வாங்களே. அந்த நீரோட்டம் இந்த சென்னை மழை வெள்ளத்திலாவது ஓடுச்சுங்களா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..

நவ, டிசம்பர் நீக்கம்

தமிழகத்தில் இனிமேல் மழை, வெள்ளம் ஏற்படாமல் தடுக்க காலண்டரில் இருந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அதிரடி நீக்கம்...
அவரே தான்.. என்கிறார் இந்த வலைஞர்

நீர்நிலைகளின் பிறந்து வீடு

இன்று மழை நீர் புகுந்த வீடு எல்லாம் முன்பு ஒரு காலத்தில் அது நீர்நிலைகளின் பிறந்த வீடாக இருந்திருக்கும்.. என்கிறது இந்த டிவிட்..

நாளைய குடி நீர்..

பொழிவது மழை அல்ல.. நாளைய குடி நீர்.... என்கிறார் இந்த வலைஞர்

மழை பெய்யறது ஒரு குத்தமா?

மழை பெய்யுறது ஒரு குத்தமா? என்கிறது இந்த டிவிட்

English summary
Netizens making fun of chennai rain and flood. There was heavy rain in Chennai last night. Lots of memes also roaming on Social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X