நல்லவேளை காட்டுக்குள் இருக்கும்னு சொல்லாம இருந்தீங்களே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தவறிய அரசை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் தான் உள்ளது என்றும், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டுகளை போல்

வெடிகுண்டுகளை பார்த்து பதருவதை போல் கொசுக்களை கண்டு மக்கள் பதருகிறார்கள்.. என்கிறது இந்த டிவிட்

நாலஞ்சுபேர் செத்தப்புறம்

சார் எங்க ஏரியாவுல டெங்கு கொசுவ ஒழிக்க எப்ப மருந்தடிப்பீங்க..? நாலஞ்சுபேர் செத்தப்புறம் அடிப்போம்... என கலாய்க்கிறது இந்த டிவிட்

டெங்கு என்றாலே

டெங்கு என்றாலே டங்குவாரு அறுந்துவிடும் அவலத்தில் #தமிழகம்.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்

பப்பாளி இலையை தேடி

நேற்று இரட்டை இலையை தேடி தேடி ஓட்டு போட்டவனெல்லாம் இன்று பப்பாளி இலையை தேடிட்டு இருக்கான் டெங்கு காய்ச்சல் மருந்துக்காக.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்

காரணம் வருண பகவான்

கடைசியில எல்லாத்துக்கும் காரணம் வருண பகவான் தான் அப்படின்னு அவர் மேல பழி போட்டுட போறாங்க.. #டெங்கு.. என்கிறார் இந்த வலைஞர்

சட்னி கூட நம்பாது

இத இட்லினு சொன்னா.. சட்னி கூட நம்பாது.. மொமண்ட் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

அச்சத்தோடு பார்க்க வைத்துவிட்டது

சாதாரணமாக இருமினால் கூட டெங்கு இருக்கலாம் என்று அச்சத்தோடு பார்க்க வைத்துவிட்டது இன்றைய சூழல்..! #டெங்கு.. என கூறுகிறார் இந்த வலைஞர்

நல்லவேலை..

டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது சொல்வது #ஓபிஎஸ்.. நல்லவேளை காட்டுக்குள் இருக்கும்னு சொல்லாம இருந்தீங்களே..! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Tamilnadu govt on dengue issue. Tamil nadu govt said that Dengue killed only ten in Tamilnadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற