விளம்பரமில்லாமல் உதவுன பாரு நல்ல நடிகன் மட்டும் இல்ல.. நல்ல மனுசன்னும் நிருபிச்சிட்டய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சேதுபதியின் கருணை மனசு..வீடியோ

ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தான் நடித்த விளம்பர படத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் ரூபாய் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக நடிகர் விஜய் சேதுபதி நேற்று வழங்கினார். மறைந்த அரியலூர் மாணவி அனிதா பெயரில் இந்த தொகையை விஜய் சேதுபதி வழங்கினார்.

விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்காகத்தான் நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என அழைக்கப்படுகிறார் என்றும் அவர்கள் புகழ்ந்துள்ளனர்.

நல்ல மனுசன்னும் நிருபிச்சிட்டய்யா..

சூப்பர் ஸ்டார் உலக நாயகன் பட்டம் எல்லாம் எந்த அளவு உண்மைன்னு தெரியாது.. ஆனா மக்கள் செல்வன் என்பதை 100% நிருபிக்சுக்கிட்டே இருக்கய்யா.. விளம்பரத்துக்கு உதவி செஞ்சு போட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்யறவனுங்க மத்தியில் விளம்பரமில்லாமல் உதவுன பாரு நல்ல நடிகன் மட்டும் இல்ல.. நல்ல மனுசன்னும் நிருபிச்சிட்டய்யா...

அள்ளி கொடுத்தாரு பாத்தியா..

எல்லாரும் அனிதாவுக்காக பேசிட்டு வேற வேலைய பார்க்க போனாலும்.. சத்தமில்லாமல் தான் சம்பாதித்த பணத்தை தன் மக்களுக்காக அனிதா பேர்ல அள்ளி கொடுத்தாரு பாத்தியா.. அதனால தான்டா அவரு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

மக்கள் செல்வமே...

நன்றிகள் கோடி... மக்கள் செல்வமே... என்கிறார் இந்த வலைஞர்

இப்படியும் ஒரு நடிகர்

ஒன்னுமே செய்யாம அதை செஞ்சாறு இதை செஞ்சாருனு மீம் பக்கத்துல விளம்பரம் பண்ணுற நடிகர்களுக்கு மத்தியில இப்படியும் ஒரு நடிகர்... என்கிறது இந்த டிவிட்

கல்விக்காக நன்கொடை

நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரிய சல்யூட்.. ஏழை குழந்தைகள் கல்விக்காக அனிதா பெயரில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதற்கு... என்கிறது இந்த டிவிட்

"தமிழனாகவும்" நின்று..

ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் தமிழக மாணவர்களுக்காக முன்வந்து நின்று "தமிழனாகவும்" மக்கள் மனதை வென்றுள்ள உயர்திரு. விஜய் சேதுபதி அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... என்கிறார் இந்த நெட்டிசன்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens praising Actor Vijay Sethuparhy for giving 50 lakhs rupees for poor children education.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற