திடீர் பஞ்சாப் பேன்ஸை பார்த்தீங்களா.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு வலைவீச்சு.. ஆர்சிபி அலப்பறை மீம்ஸ்!
சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ஆர்சிபி அணி உருவாக்கி உள்ள மீம்ஸை பார்க்கலாம்.
முதல்வன் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனான ரகுவரன், "என்னைய சமாளிக்கவே முடியலைல" என்று நக்கலாக சொல்வார். அதில் வரும் ரகுவரனாக சுயாஷ் சம்ரா மற்றும் ஹேசல்வுட்டை மாற்றி, "எங்களை சமாளிக்கவே முடியலைல.. இதுதான் ஆர்சிபி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் That was a good bowling மொமண்ட்.

சிவா மனசுல சக்தி படத்தில் ரேடியோ ஸ்டேஷனில் அலப்பறை கொடுக்கும் ஜீவாவை பிடிக்க போலீஸ் வருவார்கள். அப்போது ஜீவாவின் நிலைமையை பார்த்து, "நீ என்னடா சொக்கா கூட இல்லாம இருக்க" என்பார். அதனை அப்படியே சுயாஷ் சர்மாவை பார்த்து கேட்பதாக மாற்றி, "நீ என்னபா.. சாஹல் மாதிரி பவுலிங் பண்ணிட்டு இருக்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சியில், "ரொம்ப தூரம் போய்ட்டேன்.. இனிமே திரும்பி வர முடியாது.. எல்லாவற்றையும் முடிச்சிட்டுதான் திரும்பி வர முடியும்" என்று ரஜினி சொல்வார். அதில் வரும் ரஜினியாக ஆர்சிபி அணியையும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை வைத்து, "இனி திரும்பி வர முடியாது.. கோப்பையை வென்ற பின்னரே திரும்பி வர முடியும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கமான் ஆர்சிபி மொமண்ட்.

சிங்கம் 2 படத்தில் ரகுமான், மீண்டும் போலீஸான சூர்யாவை பார்த்து, பேக் டூ போலீஸ்.. என்பார். அதற்கு சூர்யா, எப்போதும் போலீஸ் என்று பதில் அளிப்பார். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஸ்லிப் திசையில் இருந்து சில ஃபீல்டிங் மாற்றங்களை செய்து கொண்டே இருந்தார். இதனால் ரசிகர்கள், பேட் டூ கேப்டன் என்று கேட்க, "எப்போதும் கேப்டன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இங்க நான்தான்டா கிங்கு மொமண்ட்.

ஜில்லா படத்தில் போலீஸை காதலிக்கும் விஜயை அவரின் நண்பர்கள், "போயும் போயும் ஒரு போலீஸை போய் லவ் பண்ணிருக்கியே அண்ணே" என்று விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதில் வரும் விஜயாக பஞ்சாப் அணியை மாற்றி, "போயும் போயும் சோக்கர்ஸ் கிட்டயே சோக் பண்ணிருக்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிரிச்சு முடியலைடா சாமி மொமண்ட்.

உன்னை நினைத்து படத்தில் திருட்டு முழி, குருந்தாடி, கருப்பா ஒருத்தன் இருப்பானே.. அவனை யாராச்சும் பார்த்தீங்களா என்று சார்லியை வெட்ட ஒருவர் தேடுவார். அதில் வரும் சார்லியாக சிஎஸ்கே ரசிகர்களையும், வெட்ட தேடும் ஆளாக ஆர்சிபி அணியையும் மாற்றி, திடீர் பஞ்சாப் ஃபேன்ஸை யாராச்சும் பார்த்தீங்களா என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயையோ.. எப்படியாச்சும் தப்பித்து ஓடிவிடு மொமண்ட்.

-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications