அரங்கம் அதிர விசிலு பறக்கவே.. பவர்ஹவுஸ் சஞ்சு சாம்சன்.. ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!
மும்பை: 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் இடையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் ராமனை அடிக்கும் ஆர்யா, "ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா" என்று சொல்லும் போது, அங்கு நிற்கும் ரங்கன் பெருமித புன்னகையுடன் இருப்பார்.. அதில் வரும் ரங்கன் வாத்தியாராக யுவராஜ் சிங்கையும், ஆர்யாவாக அபிஷேக் சர்மாவையும் மாற்றி, யுவராஜ் சிங் சிஷ்யன்டா என்று சொல்லி இறுதிப் போட்டி ஆட்டத்தை காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க வந்து யாருக்கிட்ட ரகம்.

கத்தி படத்தில் ஜெயிலில் இருந்து வந்து விவசாயிகளுக்காக போராடி தீர்ப்பை பெற்றுக் கொடுப்பார் கதிரேசன்.. இந்த உண்மை தெரிந்து ஜீவானந்தம் குடும்பம் கதிரேசனுக்கு நன்றி கூறுவார்கள்.. "அப்போது யார் பெற்ற மகனோ.. இவன் யார் பெற்ற மகனோ.. இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்" என்ற பாடல் ஒலிக்கும்.. அதில் வரும் விஜய்யாக சஞ்சு சாம்சனை மாற்றி கடைசி 3 போட்டிகளில் ஆடிய ஆட்டத்தை பார்த்து யார் பெற்ற மகனோ இவன் என்று ரசிகர்கள் நெகிழ்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சேட்டன் சம்பவம்.

கூலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரஜினிகாந்த் வில்லனை பார்த்து, "இந்த தேவா பற்றி தெரிஞ்சிருந்தும் என்கிட்டயே விளையாடுற.. " என்று கூறுவார்.. அதில் வரும் ரஜினியாக சிவம் துபேவை மாற்றி, கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்துடன் ஒப்பிட்டு, "இந்த துபே பற்றி தெரிஞ்சும்.. என் கிட்டயே விளையாடுற" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அரங்கம் அதிரட்டுமே ரகம்.

புதுப்பேட்டை படத்தில் தனுஷின் கத்தியை பார்த்து அழகம் பெருமாள், "ஏன்டா இதை வச்சிக்கிட்டா என்கிட்ட அவ்வளவு அடி வாங்கின" என்று கேட்பார். அதில் வரும் தனுஷாக அக்சர் படேலாகவும், அழகம் பெருமாளாக தென்னாப்பிரிக்கா அணியையும் மாற்றி, "ஏன்டா இவனை வச்சிக்கிட்டாடா என்கிட்ட அடி வாங்கின" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மோசமானவன்லயே முக்கியமானவன்டா ரகம்.

ஆடுகளம் படத்தில் தனுஷ் சேவலுடன் சண்டைக்கு வரும் சேவலை வெறும் ஒன்றை நிமிடத்தில் கொன்றுவிடும்.. அப்போது பேட்டைக்காரன் தயாரிச்ச சேவல்.. பேட்டைக்காரன் சேவல் தான்யா.. என்று பாராட்டுவர்.. அதுபோல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை, தோனி, ரோகித் சர்மா பட்டறைனா.. தரமான பட்டறை தான்யா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.













Click it and Unblock the Notifications