அண்ணாமலை மேல அவ்வளவு அன்பா? அட அதெல்லாம் இல்லங்க.. இணையத்தைக் கலக்கும் திருச்சி சூர்யா மீம்ஸ்!
சென்னை : பாஜகவில் சேர்ந்த 6 மாதங்களிலேயே திருச்சி சூர்யா சிவா, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் தெறித்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்த்து ரசிக்கலாம்..
சமீபத்தில் திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சூர்யா, டெய்சியை கடுமையான வார்த்தைகளால் ஆபாசமாக பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யாவை பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார். இந்நிலையில், பாஜகவில் இருந்து தான் விலகுவதாக நேற்று அறிவித்தார் சூர்யா.

சூர்யா விலகல்
பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக நேற்று அறிவித்த சூர்யா சிவா, அண்ணாமலை தலைமையில் அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைக் கைப்பற்றும், பாஜக இரட்டை இலக்க வெற்றியை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் என்றும் பதிவிட்டார். டெய்சி உடனான உரையாடலில் கேசவ விநாயகன் பற்றி ஆபாசமாக பேசிய சூர்யா, கட்சியை போகும் நேரத்திலும் கேசவ விநாயகத்துக்கு எதிராக பெரிய வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டே சென்றிருக்கிறார்.

எண்ட் கார்டு
பாஜகவில் சேர்ந்த 6 மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், பகீர் பஞ்சாயத்துகளையும் சந்தித்து விட்டு கட்சியில் இருந்து வெளியேறியிருக்கும் சூர்யாவை வைத்து சமூக வலைதளங்களில் மீம்களை தெறிக்க விட்டுள்ளனர். தலைநகரம் படத்தில் வரும் வடிவேலு காமெடி சீனை குறிப்பிட்டு, "எனக்கா எண்ட் கார்டு போட்டு எகத்தாளம் பண்றீங்க? எனக்கு எண்டே கிடையாதுடா.. பாஜக இல்லைனா, வேற கட்சி" என திருச்சி சூர்யா கூறுவது போல கிண்டல் செய்துள்ளனர்.

விபி துரைசாமி, குஷ்பு
ஒரு சின்ன பையன் திருச்சி சூர்யா, எண்ணி ஒரு வருசம் முழசா ஆகலை, அதுக்குள்ள பாஜகவில் அதகளம் பண்ணிட்டு வெளிய வந்துட்டாப்ல.. நீங்க ரெண்டு பேரும் தண்டத்துக்கு இருக்கீங்க" என திமுகவில் இருந்து சென்று பாஜகவில் சேர்ந்த வி..பி.துரைசாமி, குஷ்பூ ஆகியோரை விமர்சித்துள்ளனர். குஷ்புவை விமர்சிக்கும் இந்த மீமில் குஷ்புவே இடம்பெற்றுள்ளதுதான் ஹைலைட்.

அன்பா?
யாரோ ~ "வருங்கால பிரதமர்னு எல்லாம் புகழ்ந்திருக்கீங்க.. அண்ணாமலை மேல அவ்வளவு அன்பா மாப்ள?"
சூர்யா ~ "அன்பா? இப்படி எழுதுனா தான மாமா அவரையும் கட்சியிலிருந்து காலி பண்ணுவாங்க"

என்னல்லாம் செய்ய முடியுமோ
சூர்யா சிவா பாஜகவிலிருந்து விலகினார்- செய்தி
அண்ணாமலை டூ சூர்யா சிவா ~ உன்னைய பாஜக ல கூட்டி வந்து சேர்த்ததுக்கு உன்னால ௭ன்னவெல்லாம் செய்ய முடியுமோ ௭ல்லாத்தையும் செஞ்சிட்டு வந்துட்ட...

கவலைப்படாதய்யா சூர்யா
முன்னர் ஆபாச வீடியோ சர்ச்சையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கேடி ராகவன், தற்போது ஆடியோ சர்ச்சையில் சிக்கி வெளியேறியுள்ள திருச்சி சூர்யாவிடம் ஆறுதல் சொல்வது போல மீம் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

நீங்க் எல்லாம் இருக்கிற வரை
அண்ணாமலை தமிழக பாஜகவின் பொக்கிஷம் என சூர்யா சிவா பாராட்டு பத்திரம் வாசித்திருந்த நிலையில், நீங்க எல்லாம் இருக்கிற வரையும் என்னைய ஒண்ணும் பண்ண முடியாது" என அண்ணாமலை பெருமிதமாக நினைப்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

மனசு கஷ்டமா இருக்கு
திருச்சி சூர்யா சிவா அண்ணாமலையை வருங்கால முதல்வர், பிரதமர்னு வஞ்சப் புகழ்ச்சி அணியை பயன்படுத்துறத கூட தெரியாம ஃபயர் விடுற தொண்டர்களை நினைச்சாத்தான் மனசு கஷ்டமா இருக்கு என ஒரு நெட்டிசன் மீம் போட்டிருக்கிறார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications