மனசு அழகானது!
மனசு இருக்கே.. அது ரொம்ப அழகானதுங்க.. அந்த மனசை நாம் எப்படி போற்றிப் பாதுகாத்து வைக்கிறோம் என்பதில் அந்த அழகு நீடிப்பது இருக்கிறது.
மனசு எப்பவும் அழகாக இருக்க வேண்டுமென்றால் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டு்ம். போட்டி பொறாமை பகையை போன்றவற்றைத் தவிர்த்து நல்ல எண்ணங்களை வளர்த்து நம் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். மனதில் கவலை இருந்தால் நம்மால் எந்த செயலையும் சரியாக செய்ய முடியாது.

மனதில் நாம் எதை ஆழமாகச் சிந்திக்கிறோமோ அதைச் செயல்படுத்தி வெற்றி அடைகிறோம். எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ள நீங்கள் நினைத்தால் முடியும். வாழ்வின் வசந்த கால நினைவுகளை அவ்வப்போது மனதில் அசை போடுங்கள் அதுவே நம் மனதுக்குப் புத்துணர்ச்சியை உண்டாக்கும். மனம் ஒன்றும் குப்பைகள் கொட்டும் குப்பைத் தொட்டி கிடையாது. அது பூக்கள் பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம். மனதை எப்போதும் அழகாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் உள்ளது.
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். காரண காரியம் இல்லாமல் இவ்வுலகில் எதுவுமே நடப்பது இல்லை. மனம் மிகவும் அழகானது. அதில் ஏற்படும் சின்ன சின்ன ஆசைகளுக்கும் மதிப்புக் கொடுங்கள். சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவித்து மகிழுங்கள்.
ஒவ்வொரு நாளும் இனிய நாள் தான். நேற்றைய கவலைகளை மறந்து இன்று மகிழ்ச்சியோடு உற்சாகத்தோடு இந்த நாளைத் தொடங்குங்கள். மனங்கள் மலரட்டும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications