புதிதாக தொழில் தொடங்கும் MSME-க்கள் கடன் பெற பிரத்யேக சலுகை ஏதும் இருக்கிறதா? எங்கு, எப்படி பெறலாம்?
புதிதாக தொழில் தொடங்கும் எம்.எஸ்.எம்.இ -க்களும் நிச்சயமாக கடன் பெற முடியும். புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு பல பிரத்யேக திட்டங்களை வழங்கியுள்ளது. அப்படி புதிய தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் மூன்று முக்கியத் திட்டங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1.பிணையமற்ற கடன் உத்தரவாதத் திட்டம் (CGTMSE)
2. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
3. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (Stand -Up india scheme)

பிணையமற்ற கடன் உத்தரவாதத் திட்டம்
புதிய தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் திட்டங்களில் பிணையம் இல்லா கடன் உத்தரவாத திட்டமும் ஒன்று. இதன் மூலம் ஒரு நிறுவனம் பிணையம் அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ-க்களுக்களுக்கான CGTMSE -ன் புதிய வரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வரையிலான கடன் உதவிக்கு உத்தரவாதம் பெற முடியும். மேலும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புதிய நிறுவனங்கள் பெரிய அளவில் பலன் பெறலாம். இதில் மற்றவர்களை காட்டிலும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக, பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு கடன் தொகையில் உத்தரவாத கவரேஜ் 80 - 90% வரையில் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற உதயம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் உங்கள் தொழிலுக்கான திட்டத்தை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளை அணுகி, உங்கள் வணிகத்தின் முழு திட்டத்தையும் எடுத்துரைக்க வேண்டும். உங்கள் திட்டம் சரியானதாக இருக்கும் பட்சத்தில், வங்கிகள் உங்கள் கடனுக்கு CGTMSE-மிடம் இருந்து உத்தரவாதத்தை பெறும். இதன் மூலம் 10 கோடி ரூபாய் வரையில் பிணையம் இன்றி கடன் பெறும் வாய்ப்புண்டு.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமானது, புதிய எம்.எஸ்.எம்.இ -க்களுக்கும் நிதி உதவி அளிக்கிறது. இதில் அரசின் மானிய சலுகையும் கிடைக்கும். இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் நிதி உதவி பெற்று தொழில் முனைவோராக வளர முடியும். இதில் திட்ட மதிப்பீடானது உற்பத்தி துறைக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாயாகவும், சேவைத் துறைக்கு 20 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மானியத் தொகையானது தொழில் தொடங்கும் இடத்தைப் பொறுத்து 15% முதல் 35% வரையில் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைய KVIC என்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தை அணுகலாம். இந்த ஆணையத்தின் முக்கிய பணியே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் புதிய குறு, சிறு தொழில்களை தொடங்க மானியத்துடன் கூடிய நிதி உதவியை வழங்குவது தான். மேலும் கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தொழில் தொடர்பான பயிற்சி அளிப்பது மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறது. அதோடு தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த, விற்பனை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கண்காட்சிகள் நடத்துதல் மற்றும் விற்பனை நிலையங்களை அமைக்கவும் உதவுகிறது. மொத்தத்தில் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டமானது செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற PMEGP தளத்தில் (https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp) விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கான பிரத்யேக திட்டம் இது. இது பெண்கள் மற்றும் SC/ST பிரிவினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் அல்லது மேற்கண்ட பொருளாதாரத்தில் பின்னடைவில் இருக்கும் தொழில் முனைவோரின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆவது இருக்க வேண்டும். இந்த திட்டமானது புதிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பிக்க உதயம் பதிவு சான்றிதழ் , விரிவான தொழிலுக்கான திட்ட அறிக்கை, அடையாள சான்றுகள், வணிகம் நடைபெறும் இடத்துக்கான சான்றுகள் என அனைத்தும் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும் முதலில் ஆன்லைனில் ஸ்டாண்ட் அப் இந்தியா போர்ட்டலில், உங்கள் அடிப்படை விவரங்களை பதிவு செய்து, நீங்கள் தகுதியுடையவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு விருப்பமான வங்கிக் கிளையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியில், உங்கள் தொழில் திட்ட அறிக்கை, உதயம் பதிவுச் சான்றிதழ், SC/ST/பெண் என்பதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி உங்கள் திட்டத்தையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து, கடனுக்கு ஒப்புதல் அளிக்கும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications