• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
|

நாட்டுப்புறங்களின் ""சொல்கதை"" களைப் படிப்பதைவிட காதாரக் கேட்பதே சரியாக இருக்கும். இன்னும் சொல்வதென்றால் கேட்பதோடு பார்பதுவும் என்று சேர்த்துக்கொள்ள வேணும்.

இந்த கதை சொல்லிகள், ஒருவருக்கு மற்றவர் கதை சொல்லுவதிலும் கூட வித்தியாசப்படுவார்கள்.

கதை நடத்திக்கொண்டு போவதில்

சொல் பிரயோகங்களில்

ஒலி அழுத்த ஏற்ற இறக்கங்களில்

முகபாவனைகளில், இவற்றோடு அவர்களுடைய உடல் உறுப்புகளும் சேர்ந்து சைகை மொழிகளோடு சொல்லும் பாங்கு,

ஒரே ராக ஆலாபனையின் உயிர்ச் சஞ்சாரங்களை

எப்படி எழுதிப் படிக்க முடியாதோ அதே போல்தான்

கதைசொல்லிகள் முக அங்கஅசைவுகளையும்

அவர்களின் சொல்மொழி லாவகத்தையும் எழுத்தில் கொண்டு வருவதுசிரமம்.

இந்தச் சொல்கதைகளை நான் எழுத்தில் தரும்போதெல்லாம் ஒரு வகை மனஉறுத்தலுக்கு ஆளாவேன்; பிழை செய்ககிறோமோ என்று.

பாயசத்தை அப்படியே இலையில் படைக்காமல் வடிகட்டி தம்ளரில் ஊற்றித் தருவது போல என்றே மனசில் தோன்றும்.

வாசிபாவனுக்கு வேண்டியது கதை மட்டுமே. சுவை மிகுந்த உணவை அளளி விழுங்குவதுபோல, நாக்கில்படாமலே விழுங்கும்அவசரக்காரன் இவன். பிசைந்து வைத்த தயார் உணவு கேட்பவன். மலர்ந்த வாதமிகு மலர்களை படத்தில் பார்த்து ரசிப்பவன். வேற புகல் இல்லாமல்தான் இவனோடு "கொண்டாட" வேண்டியதிருக்கிறது.

இங்கே தரப்பட்டிருக்கும் சொல் கதையை அந்தக் கதை சொலலி சொன்ன சொற்படி அப்படியே தந்திருக்கிறேன்.

ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் என்றாலும் அந்தத் தமிழ் மகள் சொன்னதை மீண்டும் ஒரு முறை திரும்பவும் படித்துப் பார்க்கலாம்தானே?

ஒரு ஊரில் ஒரு அண்ணன் தம்பி இருந்த்ாக. அவுகளுக்கு ஒரு குறுக்கம் "" விதைப்பாடும் "" ஒரு வீடும் இருந்துச்சி.

அண்ணங்காரன் ரொம்பவும் வினையக்காரன். உலகத்துல இருக்க சொத்துஎல்லாம் நம்மதுவா இருக்கக்கூடாதான்னு "" அன்னவலி "" பிடிசித்திரிவாம். ஆனா தம்பிகாரன் தப்பிப் பிறந்தவன. வெளுத்ததெல்லாம் சீல : கறந்ததெல்லாம் பாலுன்னு ரொம்ப வெள்ளந்தியா இருப்பாம். த்ம்பிக்கு நாலஞ்சி வருஷம் அண்ணங்காரன் மூத்தவம்.இப்பவே தம்பிய காங்கயில ""கா னுகானு "" ன்னு

இருக்கு. என்னெக்கி இருந்தாலும் இவம் நமக்கு பங்காளிதானெ கை அகலம் இருக்க காட்டையும் வீட்டையும் பிரிக்கத்தானெ போறான். இம்புட்டுக்கானும் இருக்கத பிரிச்சுத்தந்துட்டு நாம என்ன செய்யன்னு இப்பவே அண்ணங்காரனுக்கு வவுத்துல புளி போட்டு கரைக்கி. எப்படியும் தம்பிய ஒன்னுத்துகும் ஒதவாதவனா வளத்துரனும்னு நெனைச்சிட்டாம்..அந்த நினைப்புப்படி தம்பிய எந்தவேலையும் செய்யவிடாம வளத்தாம். தம்பிக்காரன் எதும் வேலை செய்ய வந்தாலும் எப்பா, நீ எனக்கு செல்ல்த்தம்பி, "" வருச "" தம்பி நீ வேல செஞ்சா எனக்குப் பொறுக்காது அய்யா. நீ வேளையும் தின்னுட்டு படுத்துதூங்கு. மந்த, தெருன்னு போயி விளையாடு. நீ ""வேல செய்த "" நாளெல்லாம் கிடக்கு. அப்ப் பாத்துக்கிடலாம் அப்பிடின்னு சொல்லி அவன வேல செய்ய் விடாம ஆக்கிருவாம். தம்பியும் தாயி தகப்பன் முகத்த பாரம அண்ணங்கைக்குள்ளயே வளந்தவனாங்காட்டி அவஞ் சொல்லத்தட்டாம வளந்து வந்தாம்.

தம்பிகிட்ட இப்பிடிச்சொல்லிட்டு.ஊர்க்காரங்ககிட்ட அண்ணன் பேசுறப்ப "" அய்யொ, அவம் பேச்சவே ஏங்கிட்ட பேசாசதிக. லேய் இப்பிடி சும்மாவே திரியிதேயடா என்னமும் ஒரு வேல வெட்டி செஞ்சா என்னனு கேட்டா, " நீ என்னடா சொல்றது நா என்னடா கேக்கிறதுனு கம்பெ எடுத்துகிட்டு அடிதடிக்கு வாராம்! " எங்க் ஆத்தா செத்தவ என்னையும் அவகூடவே கூட்டீட்டுப் போகாம இப்பிடி ஒரு கூறு கெட்டவன எந்தலையில கட்டிட்டுப் போயிட்டாளேன்னு ஒரு பாட்டம் அழுவாம்.

ஒன் தம்பிய பாத்தா அப்பிடித் தெரியலையே அப்படியா சொல்றாம் ; பாத்தா அப்புராணியா இருக்கானே, கூப்புட்டு சண்டை பிடிப்போம்னு மத்தவங்க சொன்னா அய்யோ அப்பிடி செஞ்சுராதீங்க உங்களைக் கையெடுத்துக் கும்புடுதேன் அவங்கிட்டெ எதுவும் கேட்டுராதிய உங்ககிட்ட நல் பிள்ள போல தலைய தலைய அலைப்பாம் பிறவு என்கிட்ட வந்து, " ஏண்டா, ஊரெல்லாம் என்னெப் பத்தி தூத்திகிட்டா அலையுதென்னு அறுவாளை எடுத்துகிட்டு சண்டைக்கு வருவாம் நீங்க நல்லது சொல்லபபோவ எனக்குத்தேம் சனியன் பிடிச்சுசின்னு சொல்லி, ஊர்க்காரங்க்கிட்ட தம்பிய பொல்லாதவனா ஆக்கி வச்சிருநதாம்.

தம்பிக்கு இந்த "" வெனையல்லாந் தெரியாது"". வீட்டுவல அண்ணன் வார்த்தைக்கு மே வார்த்தை பேசாம, எது செய்யாதாலும் நம்ம அண்ணன் நமக்கு நல்லதுதாம் செய்வாம்னு நம்பி, மூணு நேரமும் திங்கவும் ஊரைச் சுத்தவுமா இருந்தாம்.

ஒரு நா அந்த் ஊராளுத ராசா எல்லாரையும் கூப்புட்டுவிட்டாரு. அந்த ராசாவுக்கு ஒரு அழகான மக இருந்தா. அந்த மகளுக்கு இதே ஊருல உள்ள ஒரு புத்திசாலியான மாப்பிள்ளை வேணும்னு நினைச்சாரு. அதெக் கண்டு பிடிக்க ஒரு பந்தயம் வைக்க ஏற்பாடு பண்ணார். அதுபடிக்கு, ராஜாவும் ராணியும் ஊராவலம் வருவாங்களாம். அந்த ஊர் கோலத்த வந்து எல்லாரும் பார்த்து, ராஜா ராணிய தத்ரூவம படம் வரைஞ்சி கொண்டு வராங்களோ அந்த ஒரு இளவட்டத்துக்குத்தான் ராஜாவோட ஒரே பொண்ண தரப்போறதா சொன்னாரு. பொண்ணயும் கட்டிக்கொடுத்து ஊருக்கு ராசாவாகவும் ஆக்குவேம்ன்னார் ராசா.

சரியா படம் வரையாம தப்பிதமா படம் வரையறவஙகளுக்கு இரும்புக்கம்பிய பழுக்க் காய வச்சி ரெண்டு கையிலயும் ஒரு இழுத்து விடுவோம்ன்னு அறிவிச்சாரு.

இதக்கேட்ட எல்லா இளவட்டங்களும் ராசா மகளக்கட்டவும் ஊராளுத ராசா ஆகவும் ஆசை இருக்கு. ஆனா கையில சூடு வப்பாங்களேன்னு பயமாகவும் இருக்கு!. இந்த அண்ணங்காரனுக்கு இதக் கேட்டதுலயிருநது இந்த ஊருக்கு எபபிடியாவது ராசாவாகவும் ஆயிறணும் ராசா மகளவும் கட்டிக்கிறனும்ன்னு ஆசையான ஆசை வந்துட்டது! ஆனா படம் வரையிறதுக்கு என்ன பண்ணன்னு பலமா ரோசன பணணாம். பக்கத்து ஊர்ல நல்லாப்படம் வரையிற ஒருத்தன் இருந்தாம்.அவனப்போயி கூப்புட்டாம். ராசா உளூர்க்காரனுக்குத்தான் பொண்ணக் குடுபபேம்ணு சொல்லிட்டதால அடுத்த ஊர்க்காரனால பயமில்லைன்னு நினைச்சிக் கூட்டீட்டு வந்து ரகசியமாவச்சி: இனனென்ன மாதிரி சங்கதி : நா ராசாவா ஆயிட்டா ஒன்ன மந்திரி ஆக்கிருவேம்ன்னாம

    "ஒம் மந்திரி பதவி எவனுக்கு வேணும்: ரோதன வேல அது ""

"வேற என்னதாம் வேணும் கேளு ; தந்துருதேம் "" னனாம்.

நீ நாளைக்கு ராசா ஆக்ப் போற. உனக்கு அரமன கிடைக்கபபோகுது; ஒனக்கெதுக்கு இந்த வீடும் காடும்? இந்த ரெண்டையும் எழுதித்தந்துட்டா படம் வரைஞ்சி தர்ரேம் "" ன்னாம். அதுபடியே எழுதித் தந்துட்டாம் காட்டையும் வீட்டெயும் ; தம்பிக்கு பாதி பாத்தியம் உண்டேன்னும் பாரம எழுதித் தந்துட்டாம்.

இபபோ படம் வரையிறது யாருக்கும் தெரியசப்படாது. அதுக்கு என்ன செய்ய? இவனோட காட்டுக்குப்பக்கத்துல ஒரு மலை இருந்தது. அந்த மலையில ஒரு குகை இருநதது. அங்க வச்சிக்கிடலாம்ன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டாங்க.

ராசாவும் ராணியும் ஊர்கோலம் வந்தாங்க பல்லககுல. எல்லாரும் போய்ப் பார்த்தாங்க. ராசா பக்கத்துல இருந்த ராணி முகத்த சல்லாத்துணியால மூடி இருந்ததுன்னாலும் ராணி முகம் நல்லாவே தெரிஞ்தது.

படத்தை பத்து நாளைக்குளள எழுதிக் கொண்டாரணும். அண்ணங்காரன் காட்டுக்கு வேலைக்குப் போறதுபோல சாப்பாட்டையும் எடுத்துக்கிட்டு போவாம், படம் எழுதுகிறவனக்கும் சேத்து. வீட்டை கவனிக்காம அண்ணங்காரன் காடே கதின்னு இருந்தது தபிக்கு சந்தேகம் வந்துட்டது. அண்ணனுககு தெரியாம என்னதாம் நடக்குன்னு கவனிக்க ஆரம்பிச்சாம். விடியக்காலம் காட்டுக்கு போற அண்ணன் ராத்திரிக்கு நேரங்கழிச்சி வராம். என்ன இவ்வளவு நேர்ம்னனு கேட்டா காட்டுவல அவ்வளவு வேல இருக்குஙகிறது! அண்ணன் அசந்து தூங்கினதும், ஊரு மொத்தம் அடங்குனதும் தம்பிக்காரன் பந்தத்த கொளுத்தி எடுத்துகிட்டு காட்டு குகைக்குப் போனாம். குகைக்கு உள்ளெ யாருமே இல்லை. அறைகுறையா படம் வரைஞ்சி வச்சிருக்கு. ஓஹோ இப்படியா சங்கதின்னு தெரிஞ்சிக்கிட்டாம்.ஏறக்கனவே இவனுக்கும் கொஞ்சம் கொஞ்சம் படம் வரையத் தெரியும்; சும்மா இருக்கிற நேரமெல்லாம் ஏதாவது வரைஞ்சுகிட்டே இருப்பாம் விளையாட்டுப்போல. அதெப் பாத்த உடனெ இவனுக்கும் படம் வரையணும்னு தோணிட்டது. அவங்களுக்குத் தெரியாம இவனும் ராசா ராணி ஊர்கோலம் வார படத்த வரைய ஆரம்பிச்சான.

நேரம் காணாததினால வேகமா வரைய முடியல. அதும் படத்த ஒளிச்சி வைக்க வேணாடியதிருக்ரு. ராசா உருவத்த வரைஞ்சி முடிச்சி ராணி முகத்தையும் வரைஞ்தசாச்சி இனி ராணியோட மார்பை மட்டும் தான் வரையணும். அதுக்குள்ள நாள் தவணை முடிஞ்சது. எல்லாரும் கொண்டு அரண்மனையில படங்களை வச்சிட்டாங்க. தம்பிக்காரனும் வேற வழி இல்லாம அறையு ம் குறையுமா கொண்டு போயி வச்சாம். ராசா வந்து பாத்தாரு. சரியான படம்னு அவரு சொன்னது இந்த, மார்பு வரையாம விட்டுப்போன படத்ததாம்!

ராசா சொன்னாரு: எங்கூட ஊர்கோலத்துல வந்தது ராணி வேசம் போட்ட வேலைக்கார அலி! நெசமான ராணி இல்லெ. அதெ சரியாக் கண்டு பிடிச்சி, மார்பை போடாம விட்டதுதாம் சரி. இத வரைஞ்சவனுக்குத்தாம் என்னொட பெண்ணைக் கொடுத்து பட்டமும் கட்டி வைப்பேம்ன்னார்.

பேராசைப் பட்ட அண்ணங்காரனுக்கு வீடும் காடும் போயி ஓட்டாண்டியா ஆயிட்டானாம். கூலி வேல செஞ்சித்தாம் பிழைகக்கானாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more