• search

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  எல்லாமே நமக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் சிக்கல் இல்லைதான். ஆனால் பாதகமான நிகழ்ச்சிகள் ஏற்படாமலே வாழ்க்கை நடத்த யாரால் முடிகிறது? அதை விதி என்று விவரிக்கிறது நமது சமயம். ஆனால் அந்தப் பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குச் சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது என்று உறுதியாக எடுத்துக் கொண்டால் இருக்கத்தான் செய்கிறது.

  வாழ்க்கையில் கஷ்டங்கள் வரக்கூடாது என்று சிலர் எதிபார்ப்பார்கள். இந்த நினைப்பு, குழந்தைத்தனமானது. தினம் தோறும் தீபாவளியாகவேஇருக்காதா? என்று ஏங்குகிற, எதிர்பார்க்கிற மத்தாப்பூ மனசுக்காரர்கள் சின்னப்பிள்ளைகள். கஷ்டமே இல்லாத வாழ்க்கை என்பது யாருக்குமேஅமைந்ததில்லை.

  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் இன்பமும், துன்பமும். துன்பம் என்பது வாழ்வின் ஒரு நிலை... ஒரு நிகழ்ச்சி... ஒரு நேரக் கட்டாயம்.... விதிப்படியும்இயற்கை நியதிப்படியும் நடந்தாக வேண்டிய நடப்பு. அந்தக் கஷ்டங்களை எதிர்கொள்வதும் வெல்வதும் தான் வாழ்வின் சுவை... சுகம்...சுவாரஸ்யமானசவால்கள்... வாழ்க்கையை வளப்படுத்தும் வழி வகைகள்.

  கஷ்டம் என்று ஒன்று வராவிட்டால் கடவுளை யார் நினைக்கப்போகிறார்கள்! பத்து மணி பஸ்சுக்கு பதைபதைக்க ஓடி வருகிறோம். பஸ் கிடைத்தால்கடவுள் நினைப்பு வருவதில்லை. இப்பத்தான் பஸ் போச்சு என்று ஒருவர் சொன்னால் அடக் கடவுளே ... எப்படி ஆபிஸ் போறது என்று கடவுளை ஆபிஸ்வரை கூட்டிப்போகிறோம். கஷ்டங்கள் தான் கடவுளை ஞாபகப்படுத்துகின்றன. கஷ்டத்துக்கான காரணங்களை ஆராய்ந்தால் நமக்கு அறிவுத் தெளிவுவரும். உலக வாழ்வின் உன்னதமான உண்மைகள் புலப்படும்.

  மகாபாரதம் போர் முடிந்து, அஸ்தினாபுரம் வெறும் அஸ்திபுரமாக - சாம்பல் சாம்ராஜ்யமாகத் தருமரிடம் வந்தது. ஒரு நெருப்புப் போருக்குபபின் கிடைத்தகுவைத் போல!. தருமருக்கு ராஜ்ய ஆசையே இல்லை. கண்ணன்தான் தருமர் மனத்தை மாயமாய் மாற்றினான்.

  தருமர் தலையின் தங்க மகுடம். பளபளப்பான பட்டாபிஷேக படாடோபம். விருந்து..மகிழ்ச்சி, விழா மின்னல் எல்லாம் முடிந்து அரண்மனை அமைதியடைந்தமறுநாள் விடியலில் துவாரகைக்குக் கண்ணன் புறப்படும் காலை நேரம், தருமரை வணங்கி, அருச்சுனனை அணைத்து, பீமனைத் தழுவி, நகுல சகதேவருக்கு நல்வாழ்த்து சொல்லித் தேரில் ஏறினான் தேரை ஓட்டிய கண்ணபிரான்.

  அவன் கண்கள் யாரையோ தேடின... கண்ணனை நோக்கிக் கைகூப்பி நின்ற அந்தத் திருஉருவத்தைக் கண்ணன் கண்டு பிடித்துவிட்டான். தேர்த்தட்டிலிருந்து குதித்துஓடி வந்து அவளை வணங்கினான். அந்த பாக்கியவதி குந்தி தேவிதான்.

  அத்தை போய் வருகிறேன்! கண்ணன் கனிவான குரலில் விடை கேட்டான்.

  கண்ணா ... நலமாகப் போய்வா.... புறப்படும் முன் எனக்கு ஒரு வரம் வேண்டுமே ... தயங்கினாள் குந்தி.

  என்ன கேட்பாள்? ஜெப மாலை ...நார்மடி பூஜைக்கான உபகரணங்களில் ஒன்றிரண்டு ... அல்லது ஐந்து பிள்ளைகளுக்கும் ஆதரவு ... அரவணைப்பு.ஆசிர்வாதம்... அல்லது செத்துப்போன கண்ணனுக்கு கதி மோட்சம் ... எது கேட்டாலும் தருவது கடமைதானே.

  கேளுங்கள் அத்தை ... கேளுங்கள்... எது கேட்டாலும் தருவேன். இந்த அஸ்தினாபுரத்திலே அதிகம் கஷ்டப்பட்டவர் நீங்கள் தான்.. உங்களுக்கு இல்லாதஉரிமையா? கேளுங்கள்! ஊக்கப்படுத்தினான் கண்ணபிரான்.

  கைகூப்பி குந்தி கேட்டாள்:

  கண்ணா ... கஷ்டங்கள் வேண்டும் . துன்பங்கள் வேண்டும். இன்னும் இன்னல்கள் வேண்டும்.

  அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. கண்ணன் பேசினான்:

  அத்தை ... நீ பட்ட கஷ்டங்கள் போதாதா . பிறந்த வீட்டில் நீ வளரவில்லை. பெற்ற பிள்ளை கர்ணனை நீ வளர்க்கவில்லை. விரும்பாத தாயானாய்.விரும்பிய போது உன் தாய்மை சாபத்தால் தடை செய்யப்பட்டது, பாண்டுவைப் பிரிந்து துயர் உற்றாய். துரியோதனாதிகள் உன் ஐந்து பிள்ளைகளைக் கொன்றுவிடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அழுதாய். கெட்ட பிளளைகளைப் பெற்றால் எல்லோரும் கஷ்டப்படுவார்கள். நீயோ நல்ல பிள்ளைகளைக் பெற்றே துயர்உற்றாய்.

  காட்டில் திரிந்தாய். பிச்சை எடுத்தாய். பீமன் பசிக்கு நீ மெலிந்தாய். நல்ல நிலை வந்த போது தருமன் சூதாட நீ நலிந்தாய். அஸ்தினாபுரத்தில்அவமானப்பட்டாய். பாரதப்போரிலும் பேரப்பிள்ளைகளைப் பலி கொடுத்துக் கண்ணீர் விட்டாய்... இது போதாதா! இன்னுமா கஷ்டங்கள் வேண்டும்.கஷ்டமே இல்லாத வாழக்கையைத்தான் எல்லோரும் கேட்பார்கள். நீ கஷ்டத்தைக் கேட்கிறாயே ஏன்? ஏன்? ஏன்?

  குந்தியின் வறண்ட இதழ்களில் புன்னகை நெளிந்தது. மெதுவாகச் சொன்னாள்.

  என் ஒவ்வொரு கஷ்டத்திலும் நான் யாரை நினைத்தேன். உன்னைத்தானே. ஒடோடி வந்து நீ தானே காப்பாறறினாய். கஷ்டங்கள் இல்லை என்றால்உன்னை நினைக்கப்போவதில்லை. நீ எங்கள் பக்கம் வரப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கஷ்டங்கள் உன்னை அடையும் சாதனங்கள்!.

  இதுதான் குந்தித்வம்........

  திருவள்ளுவர் கூட தனக்குவமை இல்லாதவனை மனக்கவலை தீர வணங்குக என்கிறார். என்ன பொருள்? மனக் கவலை இறைவனை அடைய ஒரு வழிஎன்பது திருக்குறள் நெறி. சங்கடம் ஒஸ்தே வெங்கிட ரமணா, என்று தெலுங்கில் உள்ள பழமொழி இதே கருத்துக்குச் சான்று கூறும். கஷ்டமே இல்லாதவாழ்க்கை என்பது கற்பனைச் சினிமாத்தனமான கற்பனை.

  எனவே, இறைவனை வேண்டும் போது கஷ்டங்களை வெல்லும் மனோபலத்தை -தாங்கி கொள்ளும் தைரியத்தைத் தா என்று வேண்டுவது அறிவுடைமைதெளிவான மனோ நிலை வளர்ச்சியின் அடையாளம். திருவள்ளுவர் ஒரு படி மேலே போனார். வாருங்கள் கஷ்டத்தைக் கஷ்டப்படுத்துவோம் என்று கட்சிசேர்க்கிறார். எப்படி? நாம் கஷ்டத்திற்குக் கஷ்டப்படாவிட்டால் கஷ்டமே கஷ்டப்படும் என்கிறார். ஆஹா!

  இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு

  இடும்பை படா தவர்.

  துன்பங்களுக்குத் துவளக்கூடாது. இக்கட்டுக்கள் வெற்றியின் படிக்கட்டுகள். கடவுளைஅடைய கஷ்டங்கள் ஒரு வழி. துன்பமும் ஞான வீட்டின் திறவு கோல் தான்.வாருங்கள். வள்ளுவர் வழியில் கஷ்டங்களைக் கஷ்டப்படுத்துவோம்.

  (இனி சுகி.சிவம் கீதையின் பாதையில் எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளைதொடர்ந்து வழங்குவார்.)

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more