தமிழகத்தில் இன்று
அதிவேக வளர்ச்சியில் இந்திய சாப்ட்வேர் துறை
டெல்லி:
சமீபகாலத்தில் இந்திய தொழில்துறையைவிட சாப்ட்வேர்துறை 5 மடங்கு அதிகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
1990ம் ஆண்டில் 150 மில்லியன் டாலர் அளவுக்கு இருந்த இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றமதி இப்போது 4பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சிறிய நகரங்களிலும் கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இன்டர்நெட் மையங்கள்பரவி வருகின்றன.
4 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சமாக இருந்த இன்டர்நெட் இணைப்புகளின் எண்ணிக்கை இப்போது 8 லட்சமாகஉயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கம்ப்யூட்டர்துறையின் பங்கு 1 சதவீதமாகத் தான்உள்ளது. உலகளவில் இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியின் பங்கு 1.5 சதவீதமாகும். ஆனால், இதுஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இன்டர்நேசனல் டேட்டா கார்போரேஷன்-வேர்ல்ட் டைம்ஸ் ஆகியவை சமீபத்தில் இணைந்து நடத்திய சர்வதேசஆய்வில் கம்ப்யூட்டர்துறையில் முன்னேறியுள்ள முதல் 55 நாடுகளில் 54வது இடத்தில் தான் இந்தியா உள்ளது.
இந்தியாவில் சராசரியாக 1,000 பேருக்கு 3 கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஒரு சராசரி இந்தியன் கம்ப்யூட்டர் வாங்கதனது 2 ஆண்டு வருமானத்தையும் செலவழித்தால் தான் முடியும். ஆனால், அமெரிக்கர்களின் மாத வருமானம்சராசரியாக ஒரு கம்ப்யூட்டரின் விலைக்கு சமமானதாகும்.
அதேபோல இந்தியாவில் 90 சதவீத கம்யூட்டர் தொடர்பான வர்த்தகம் ஆங்கிலத்தில் தான் நடக்கிறது. ஆனால்,நாட்டில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த மொழி பேசத் தெரியும்.
கம்ப்யூட்டர்களின் தாக்கம் இந்தியா முழுவதும் சீராக இல்லை. தென் இந்தியா, மேற்கிந்திய பகுதிகளில் ஐ.டி.தொழில் சிறந்து விளங்குகிறது. ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்கள் இதில் மிகவும் பின் தங்கியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.