முகத்தில் தெளித்த சாரல்...
சென்னை:
சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் சட்டசபையில் வெள்ளியன்று அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் வெள்ளியன்று கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்களுக்கு இத்துறைஅமைச்சர் என்.கே.கே.பெரியசாமி பதிலளித்தார். அப்போது அவர் அதிக உறுப்பினர் கருப்பசாமி ஏற்கனவேகூறிய புகாருக்கு பதில் தெரிவித்தார்.
அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டம் சரிவர செயல்படவில்லை. எங்கள் தொகுதியான சங்கரன்கோவிலில் ஒரு இடத்தில் இலவசவேட்டி சேலைகள் தேங்கிகிடக்கின்றன என்று கருப்பசாமி புகார் கூறினார்.
அந்த புகார் குறித்து பேசிய அமைச்சர், ""இது என்னுடைய தவறல்ல. இலவச வேட்டி சேலைகள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்பதை கண்டறியசம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை சரிவரசெயல்படுத்தாதது உறுப்பினரின் தவறு தான் என்றார்.
இதை அதிக உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். அமைச்சர் தனிப்பட்ட முறையில் சட்டமன்ற உறுப்பினரை குற்றம் சாட்டுகிறார். எனவே நாங்கள் அதற்குவிளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் சுந்தரம், கருப்பசாமி, விஸ்வநாதன் ஆகிய மூவரும் எழுந்து நின்றனர். பேசமுயன்றனர்.
ஆனால், சபாநாயகர் அவர்களை பேச அனுமதிக்கும் முன்பு, அமைச்சரிடம் அதுபற்றி விளக்கம் கேட்டார். ""நீங்கள் உறுப்பினர் மீது தனிப்பட்ட முறையில்குற்றம் சாட்டுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அமைச்சர் ""நான்அப்படி எந்த குற்றம் சாட்டவில்லை. உறுப்பினருக்கு இருக்கும் அதிகாரத்தை பற்றி தான்குறிப்பிட்டேன் என்றார்.
உடனே அதிமுக உறுப்பினர்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர்.