For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
சென்னை அருகே 1000 ஏக்கரில் கம்ப்யூட்டர் பூங்கா

சென்னை:

ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சென்னைக்கு அருகில் 1000 ஏக்கரில் பன்னாட்டுத் தரத்தில் தகவல்தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில் துறையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் திட்டங்கள் பற்றி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிதிங்களன்று அறிவித்தார். விபரம் வருமாறு:

பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி என்ற இடத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய வன்பொருள் (ஹார்ட்வேர்)மற்றும் மென்பொருள் (சாப்ட்வேர்) வளர்ச்சிக்கு பன்னாட்டுத் தரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம்உருவாக்கி வருகிறது.

சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி என்றும் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தைதொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகியநிறுவனங்களும் தங்களது மையங்களை இந்தப் பகுதிகளில் நிறுவி உள்ளன.

தமிழக அரசு "தமிழ்நெட் 1999 என்ற உலக தமிழ் இணைய கருத்தரங்க மாநாட்டை சென்னையில் நடத்தியது. அதையொட்டிதமிழ் விசைப்பலகையும், தமிழ்க் குறியீடுகளும் தரப்படுத்தப்பட்டுள்ளன

அமெரிக்காவில் உள்ள யூனிக்கோட் கன்சோர்டியம் எனும் மையத்தில் தமிழ்நாடு, கூட்டு அங்கத்தினராக பதிவு செய்துகொண்டுள்ளது. அதில் அங்கத்தினராகும் முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் டாக்டர்வா.செ.குழந்தைசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முவதும் 1200 மேல்நிலைப் பள்ளிகளிலும், 11 மற்றும் 12ம்வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில்தமிழில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க தமிழ் இணைய ஆய்வு மையம் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில்அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1996 மே முன்பு வரை 34 மென்பொருள் நிறுவனங்களே இருந்தன. இப்போது 562 மென்பொருள் நிறுவனங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. 95-96ல் கோவையில் 4 மென்பொருள் நிறுவனங்களே இருந்தன. இன்றைக்கு 58 மென்பொருள்நிறுவனங்கள் கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தேவையான மென்பொருள்களில் பெரும்பாலானவை, சென்னையிலுள்ளமென்பொருள் நிறுவனங்களில் தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.

"வேர்ல்ட் டெல் நிறுவனம் தமிழகம் முழுவதிலும் 13000 சமுதாய இணைய மையங்களை அமைப்பதற்கான பணியைத்தொடங்கி விட்டது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X