For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மே 08, 2000


கண்ணம்மா - என் காதலி - 4

மன்னர் குலத்திடையே பிறந்தவனை -இவன்

மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?

சின்னஞ் சிறு குழந்தை யென்ற கருத்தோ?-இங்கு

செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?

வன்னமுகத்திரையைக்களைந்திடென்றேன்-நின்றன்

மதங்கண்டு துகிலினை வலிதுரித்தேன்.

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எனக்

கெண்ணப் படுவதில்லையேடி கண்ணம்மா! (1)

கன்னி வயதிலுனைகண்டதில்லையோ?-கன்னங்

கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?

அன்னிய மாகநம் முள் எண்ணுவதில்லை-இரண்

டாவியுமொன் றாகுமெனகொண்டதில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுதென்னே?-துகில்

பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வேனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ?-கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்வெள்குமோ? (2)

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர்சொல்லும்-சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்

பன்னி உபசரணை பேசுவ துண்டோ?

நீட்டுங்கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை

நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?

மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால்-அவை

முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? (3)

சாதிக்காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்

சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்,

நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ-மிக

நெடும் பண்டைக் காலமுதற் நேர்ந்து வந்ததாம்.

போற்றிமி ராமனென முன்புதித்தனை-அங்கு

பொனிதிலைபக் கரசன் பூமடந்தை நான்;

ஊற்றமு தென்னவொரு வேய்ஙகுழல் கொண்டோன்-கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான் (4)

முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை

மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;

பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.

சொன்னவர் சாத்திரத்தில்மிக வல்லர் காண்,-அவர்

சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை

இன்னுங் கடைசிவரைஒட்டிருக்குமாம்,-இதில்

எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே! (5)

Back To Index

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X