தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டிய 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பெரியார் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
யாழ்பாணத்தில் சிங்கள ராணுவவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்துள்ளனர். இலங்கையில் நடந்து வரும் இப்பிரச்சனையினால் உலக நாடுகள் அனைத்தும்அச்சம் கொண்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டுவது, பிரச்சாரம்செய்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.
இதனால் இப்போஸ்டர்கள் ஒட்டிய விஷயத்தில் தொடர்புடையதாகக் கருதப்டும் 10 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் போஸ்டர் அச்சடித்துக் கொடுத்த அச்சக உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.
யு.என்.ஐ.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்