For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
2 மலேசியர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

(நமது நிருபர்)

சென்னை:

சென்னையில் வசிக்கும் மலேசியாவை சேர்ந்த இருவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று குடியேற்ற அதிகாரி பிறப்பித்தஉத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மலேசிய குடியுரிமைப் பெற்றவர்கள் டான் ஸ்வீ பூ மற்றும் சா லியான் ஹூன் ஆகியோர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி. கோலாலம்பூரில் விசா பெற்று97ம் ஆண்டு இந்தியா வந்தனர்.இந்த விசா 2001 வரை செல்லுபடியாகும். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று இரண்டு நிறுவனங்களில் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் முதலீடுசெய்தார் டான்.

இந்த நிறுவனங்களை சேர்ந்த மோகன் ஜோசப் மற்றும் கதிர் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இந்த நிறுவனங்களின் இயக்குனராகவும் டான் ஸ்வீநியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் டான் ஸ்வீக்கும், மோகன் ஜோசப் மற்றும் கதிருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.

தனது பணத்தை திருப்பித் தருமாறு டான் ஸ்வீ கேட்டபோது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். இதையடுத்து தன்னிடம் இருந்து கடன் பெற்ற இருவருக்கும்வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் டான்.

மேலும் கம்பெனி விவகாரத் துறைக்கும் புகார் அனுப்பினார். தாம் முதலீடு செய்த நிறுவனங்களில் தனக்கு எந்த பங்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்றும்நிறுவனம் செயல்பாடு பற்றி தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் டான் ஸ்வீ புகார் கூறினார்.

இதையடுத்து சென்னையில் உள்ள குடிபெயர்பவர்களுக்கான அதிகாரியிடம் டான் ஸ்வீ பற்றி மோகன், கதிர் ஆகியோர் புகார் கொடுத்தனர். வர்த்தக விசாவில்டான் ஸ்வீ இந்தியா வந்துள்ளதாக புகார் கூறினர்.

இந்த புகாரை அதிகாரிகள் விசாரித்து, டான்ஸ்வீ மற்றும் அவரது மனைவியின் விசா காலாவதியாகி விட்டதால், உடனடியாக இருவரையும் இந்தியாவை விட்டுவெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டான் ஸ்வீயும், சாலியான் ஹூனும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகம்,அதிகாரிகள் உத்தரவை ரத்து செய்தார். மனுதாரர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்குவது பற்றி பரிசீலிக்க அவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X