தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தான் பிடித்த பகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் பலம் இலங்கை ராணுவத்திற்குக் கிடையாது என்று முன்பேநாம் எழுதியிருந்தோம்.

அதுபோலவே, தான் பிடித்த பகுதிகளை விடுதலைப் புலிகளிடம் இப்பொழுது இலங்கை ராணுவம்இழந்திருக்கிறது. விடுதலைப் புலியினரால் சூழப்பட்டு சுமார் 35,000 இலங்கை ராணுவத்தினர் முன்னேறவும்பலமின்றி, தப்பிக்கவும் வழியின்றி, தாக்குப்பிடிக்கத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றஇலங்கையின் வேண்டுகோளின்படி இந்திய ராணுவத்தை அனுப்புவதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"தமிழர்களை தாக்க முனைந்திருக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவுவதா? என்பதுதான் இங்கேஅனேகமாக எல்லா கட்சிகளும் எழுப்புகிற ஆட்சேபம், இலங்கை ராணுவம் தமிழர்களைத் தாக்கமுனைந்திருக்கிறது என்பது பொய். இலங்கையில் நடக்கிற மோதல், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டையே தவிர,தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்துகிற தாக்குதல் அல்ல."விடுதலைப் புலிகளை ஒடுக்க முயற்சிப்பதே தமிழர்களின் மீதான தாக்குதலுக்கு நிகரானதுதான் என்ற பிரச்சாரம்இங்கே நடக்கிறது. இதில் உண்மை கலப்பு கொஞ்சமும் இல்லை. சிங்களவர்களுக்கோ இலங்கை அரசுக்கோமட்டும் எதிரானது அல்ல விடுதலைப் புலி இயக்கம் -என்பதற்கு அவர்களுடைய தமிழர்கள் கொலைப்பட்டியலேசான்று.

"தமிழர்களைத் தாக்கும் இலங்கை அரசுக்கு உதவுவதா? என்று தமிழகத்தில் குரல் எழுப்புகிற அரசிய்லவாதிகளும்,இயக்கங்களும், தமிழர்கள் மீதுள்ள பற்றினால் பேசவில்லை - விடுதலைப் புலிகளின் மீதுள்ள பாசத்தினால்பேசுகிறார்கள். இவர்களுடைய அக்கறை இலங்கையிலுள்ள அப்பாவி தமிழர்களை பற்றியதுதான் என்றால் -அமிர்தலிங்கம், பத்மனாபா உட்பட தமிழகத்திலும், இலங்கையிலுமாக மற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களைவிடுதலைப் புலிகள் கொன்ற போது, இவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பார்கள்; இலங்கையில் எண்ணற்றதமிழர்களை தங்களுக்கு அடங்காதவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக விடுதலைப் புலிகள் கொன்ற போது, -இவர்கள் "இனி வேண்டாம் விடுதலைப் புலி சகவாசம் என்று அந்த இயக்கத்தையே ஒதுக்கி வைத்திருப்பார்கள்.அப்படியெல்லாம் செய்யாததால், இவர்கள் கருணை தமிழர்கள் மீதானது அல்ல என்பது தெளிவாகிறது.இவர்களை இயக்குவது தமிழ்ப் பற்று அல்ல. தீவிரவாதப் பற்று, இது தமிழகத்திற்குத்தான் ஆபத்து.

விடுதலைப் புலிகள் மீதுள்ள பேரன்பின் காரணமாகத்தான் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம்விடுதலைப் புலிகளுக்கு இலங்கையில் பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தலையிட வேண்டும் என்றுஅலறுவதையும் அவர்கள் கை ஓங்குகிற போதெல்லாம் இந்தியா தலையிடக்கூடாது என்று கூறுவதையும்வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, ராணுவத்தை அனுப்பக் கூடாது என்று சொல்வதற்கு இந்த விடுதலைப் புலி அபிமானிகள் கூறுகிற வாதங்கள்,முழுமையாக ஒதுக்கப்பட வேண்டியவையே. என்றாலும், வேறு காரணங்களினால் இந்தியா, இலங்கைக்குராணுவத்தை அனுப்புவது என்பது மிகவும் சிக்கல் நிறைந்த விஷயமே. முன்பு விடுதலைப் புலிகளோடு சேர்ந்துகொண்டு, பிரேமதாசாவின் இலங்கை அரசு, இந்திய அமைதிப் படையை வெளியேற்ற முனைந்த விவகாரம் -இந்தியாவினால் மறந்து விடப்படக் கூடியது அல்ல. அதற்கு இன்றைய இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க முன்வந்தால் கூட, இந்திய ராணுவத்தை அனுப்புவது என்பது எளிதாக எடுக்கக் கூடிய முடிவல்ல.

சமீபத்தில் பெற்றுள்ள வெற்றிகள் காரணமாக, தரைச்சண்டையில் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான சூழ்நிலைஇருக்கும். கணிசமான உயிர்ச்சேதம் இல்லாமல், இந்திய ராணுவத்தினால் எடுத்த காரியத்தை முடிப்பது கடினமாகஇருக்கும். விமானத் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவத்திற்கு பெரிய உயிரிழப்புகள் ஏற்படாது.ஆனால்,விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த பிறகு, விமானத் தாக்குதல் என்பதும் நடைமுறைப்பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். பாதுகாப்புக்காக சிவிலியன்கள் இடையில் தங்களை நிறுத்திக் கொள்ளவிடுதலைப் புலிகள் முனைவார்கள். பலத்த சிவிலியன் உயிர்ச் சேதம் இல்லாமல் விடுதலைப் புலிகளைஎதிர்கொள்ள முடியாத நிலை தோன்றும். ஆகையால், யாழ்ப்பாண்திற்குள் அவர்கள் நுழைந்த பிறகு, விமானத்தாக்குதல் என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விடும். இப்போதே கூட அதுதான் நிலையோ என்னவோ,தெரியாது.

ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை கொடுத்து இலங்கைக்கு இந்தியா உதவுவது என்றால் - இன்றையநிலையில், அது இலங்கை ராணுவத்திடம் போய்ச் சேருமா? சேர்ந்தாலும் அவர்களிடம் தங்குமா? அல்லது அதைப்போட்டு விட்டு ஓடி, அவை விடுதலைப் புலிகளிடமே போய்ச் சேருமா... என்பதெல்லாம் நிச்சயமில்லாதவிஷயமே. ஆக, இன்றைய நிலையில் எப்படிப்பட்ட உதவி செய்வது என்பது எல்லா சூழ்நிலைகளையும் கணக்கில்எடுத்துக் கொண்டு, ராணுவ நிபுணர்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம். பாராளுமன்ற விவாதத்தின்மூலமும், பத்திரிக்கை விமர்சனங்கள் வழியாகவும், விடுதலைப் புலிகளுடைய தீவிரவாதத்தின் அன்பர்களுடையயோசனைகளைக் கேட்டும்- தீர்மானிக்கப்படக் கூடிய விஷயம் அல்ல இது. இலங்கை துண்டாடப்படுவதுஇந்தியாவுக்கு நல்லதல்ல; தமிழத்திற்கே பெரிய ஆபத்து. அதுவும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில்இலங்கையின் ஒரு பகுதி வந்து சேர்வது - அங்குள்ள தமிழ் மக்களுக்கும் கூட நல்லதல்ல. அதனால்தான்,விடுதலைப் புலிகளின் கை ஓங்கும் போதெல்லாம் இங்கே அகதிகளின் வருகை அதிகமாகிறது.

எதிர் காலத்தில் இந்தியாவிலுள்ள பல வகைப்பட்ட தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளின் கூட்டுறவுஆழப்படுத்தப்பட்டு, இங்கே பிரச்கைனகள் பூதாகாரமாக உருவெடுக்க வேண்டும் என்றால் - இலங்கையின் ஒருபகுதி விடுதலைப் புலிகள் வசம் வருவது மிகவும் நல்லதே. இந்தியாவில் அப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்றால்- இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்படுவதுதான் நல்லது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியாஇந்தப் பிரச்னையை அணுக வேண்டும். இம்மாதிரி நெருக்கடியான நேரத்தில், இவ்வளவு சிக்கலான விஷயத்தில்,பொது விவாதம் நடத்தி முடிவுகள் எடுப்பது என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

இந்தியாவின் அணுகுமுறை எந்த அடிப்படையில் அமைய வேண்டும் - என்பது மட்டுமே, எதிர்க் கட்சிகளுடன்கலந்து ஆலோசித்து அரசு எடுக்க வேண்டிய முடிவு. "இலங்கை துண்டாடப்படக்கூடாது; இந்தியாவில் அகதிகள்பிரச்னை பெரிதாக தோன்றிவிடக் கூடாது; இந்தியாவிலுள்ள தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளுக்கு உதவிகிட்டிவிடக் கூடாது; இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் உள்ளது போல், சமஷ்டி அரசின் கீழான உரிமைகள்தரப்பட வேண்டும்; அதற்கு முதல் படியாக ராஜீவ் காந்தி ஏற்படுத்திய இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்ஷரத்துக்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசு தரவேண்டும்...என்பன போன்ற குறிக்கோள்கள்தான் இந்தியாவின் அணுகுமுறைக்கு அடிப்படையாக அமையமுடியும்.

சில கட்சிகளைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுமே இந்த அடிப்படையில் அமைகிற அணுகுமுறையை வகுத்துக்கொண்ட பிறகு, அரசு எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் டமாரம் அடித்து செய்யப்பட வேண்டிய காரியம்அல்ல.

இதற்கிடையில், இலங்கைப் பிரச்னையில் இந்தியாவுக்கு தொடர்பே இல்லாதது போல் மத்திய அமைச்சர்கள்பேசுவது வியப்பைத் தருகிறது. சில கட்சிகளை திருப்தி செய்ய,பேசப்படுகிற முலாம் பூசின பேச்சாக இதுஇருந்தால் - அதில் தவறில்லை. ஆனால், உண்மையாகவே இலங்கைப் பிரச்னை நமக்குத்தொடர்பு இல்லாததுஎன்று மத்திய அரசு நினைத்தால், அது மிகவும் தவறு. பிரச்னையின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாசெய்த உதவிகளின் காரணமாகத்தான், இலங்கை அரசு திணறுகிற நிலையை அடைந்தது. ஆகையால் இலங்கைஅரசு சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்னைக்கு நமது நாடும் ஒரு காரணமே. "அவை எல்லாம் காங்கிரஸ் அரசினால்ஏற்பட்ட பிரச்னை; நமக்கு சம்பந்தமில்லை என்று பா.ஜ.க. அரது நினைத்து விடக்கூடாது. இது குறுகிய கட்சிகண்ணோட்டத்திற்குரிய விஷயம் அல்ல; நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பிரச்னை.

இது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில், "சமஷ்டி அரசின் கீழான உரிமைகளைப் பெற இந்தியா உதவும் என்றநம்பிக்கையை இலங்கை தமிழ் மக்களிடையே இந்தியா முன்பு தோற்றுவித்தது. இடைப்பட்ட காலத்தில் இலங்கைஅரசும், இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் "இந்தியாவே! ஒதுங்கி நில் என்று கூறியது வாஸ்தவம்தான்.அதற்கு இரு சாரருமே இன்று வருந்துகிறார்கள் என்பதும் கண்கூடு. ஆகையால் இடைப்பட்ட காலத்தில்இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்ட இந்திய எதிர்ப்பு போக்கை மனதில் வைத்துக் கொண்டு,தொடக்கத்தில் பிரச்னையை தீவிரப்படுத்த நமது நாடு காரணமாகியதையும் நாம் மறந்துவிடக் கூடாது; அங்குள்ளதமிழ் மக்களுக்கு நமது நாடு ஏற்ரபடுத்திய நம்பிக்கையையும், நாம் இன்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

இந்தியாவுக்கு இதில் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை தீருவதுதான் இந்திய உள்நாட்டு அமைதிக்கும்நல்லது. ஆகையால் இந்தியா ஒதுங்கி நிற்கக்ககூடாது. என்ன செய்யவேண்டும் என்பதை ராணுவநிபுணர்களுடனும், அனுபவம் கொண்ட நாடுகளுடனும் கலந்து ஆலோசித்து, முடிவெடுத்து, அதை முரசுகொட்டாமல் முனைந்து செயல்படுத்த வேண்டும். இன்று முழுமையாக நாம் ஒதுங்கி நிற்க, ஒதுக்க முடியாதபிரச்னைகளை நாளை இங்கே தோற்றுவித்து விடும்.

இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+