தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியாவில் விரைவில் 3 புதிய மாநிலங்கள்

டெல்லி:

மத்திய அமைச்சரவை ஜார்கண்ட், உத்தராஞ்சல், சத்தீஷ்கர் ஆகிய மூன்று புதுமாநிலங்கள் அமைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாக்கள் தற்போது வரும் 17ம் தேதி நாடாளுமன்றத்தில்அறிமுகப்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தைப் பிரித்து தனி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்து உத்தராஞ்சல் மாநிலமும் உருவாக்கப்படும்.

மத்தியப் பிரதேசத்திலிருக்கும் மலைப் பகுதிகளை பிரித்து சத்தீஷ்கர் மாநிலம்உருவாக்கப்படும்.

பிரமோத் மகாஜன் கூறுகையில், முதலில் இந்த மசோதா எம்.பிக்களிடையே சுற்றுக்குஅனுப்பி வைக்கப்படும் என்றார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற