செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சியாரா லியோன்: தீவிரவாதிகள் பிடியிலிருந்து 11 இந்திய வீரர்கள் விடுவிப்பு

ஃபிரீடவுன்:

ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில் தாங்கள் பிடித்து வைத்திருந்த ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்களை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர். இவர்களில் 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தனர்.

சியாரா லியோன் நகரில் போராட்டம் நடத்தி வரும் தீவிரவாதிகளை அடக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புப் படையினர் அங்கு தீவிரநடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் அமைதி காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந் நிலையில்,தாங்கள் பிடித்துச் சென்ற 11 இந்திய வீரர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ கண்காணிப்பாளர்கள் 7 பேரை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர்.

சியாரா லியோனின் கிழக்குப் பகுதியில் லைபீரியா எல்லை அருகே உள்ள கைலாஹுன் என்ற நகரில் ஐ.நா. அமைதி காப்புப் படையைச் சேர்ந்த இந்தியவீரர்களிடம் 18 பேரும் ஒப்படைக்கப்பட்டனர் என்று ஃபிரீடவுனில் உள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. புரட்சிகர ஐக்கியமுன்னணியைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களிடம் சுமார் 500-க்கும் அதிகமாக ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் சிறைபட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

கைலாஹுன் நகரில் உள்ள ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் எந்த நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்ற நிலைதற்போது உள்ளது.

தலைநகர் ஃபிரீடவுனில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கிய சாலைச் சந்திப்பு நகரான மாசியாகாவை சில தினங்களுக்கு முன் பிடித்ததீவிரவாதிகள், அரசு ஆதரவு படைகளை எதிர்த்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற