For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செயலை விட அதன் பயனை நேசித்தால்!

By Staff
Google Oneindia Tamil News
தமிழகக் காவல்துறைக்கு 7500 பேர் தேர்வு செய்யப்படுவர் - முதல்வர் கருணாநிதி

சென்னை:

தமிழகக் காவல்துறைக்கு புதிதாக 7500 பேர் தேர்வு செய்யவும், புதிதாக 15காவல்நிலையங்கள் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடந்தவிவாதத்துக்கு அவர் அளித்த பதில்:

வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் போலீஸ்சரகத்தை இரண்டாகப் பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதியபோலீஸ் சரகம் ஏற்படுத்தப்படும். இச் சரகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரிமாவட்டங்கள் இடம் பெறும். விழுப்புரம் போலீஸ் சரகத்தில் உள்ள திருவண்ணாமலைமாவட்டம் இனி வேலூர் போலீஸ் சரகத்தில் சேர்க்கப்படும்.

பொதுமக்களின் புகார்களைப் பெற சென்னை நகரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. அலுவலகத்தில் தனி தொலைபேசி வைக்கப்படும். இலவசமாக இந்தஎண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்தவசதி படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் சிறுசிறு வணிகர்கள்துன்புறுத்தப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. பிரத்யேக வழக்குகளைத் தவிர மற்றநேரங்களில் சிறு வணிகர்களை தேவையில்லாமல் சோதிக்கவோ, விசாரிக்கவோகூடாது என உணவுக் கடத்தல் தடுப்புப் போலீஸாருக்கு உத்தரவிடப்படும்.

காவல்துறை இயக்குநர் அலுவலகத்தை தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுடன்கம்ப்யூட்டர் மூலம் இணைக்கவும், போலீஸ் நிலையங்களைப் பொதுமக்கள்துரிதமாகத் தொடர்பு கொள்ளவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.காவல்துறை-பொதுமக்கள் தொடர்பை நவீனப்படுத்தும் இத் திட்டத்தின் மூலம்,கம்ப்யூட்டர் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும். முதல்தகவல் அறிக்கையின் நகலையும் உடனே பெற முடியும்.

இத் திட்டத்தைச் செயல்படுத்த உள்துறைச் செயலாளர் தலைமையில் டிஜிபி, தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர், கூடுதல் டிஜிபி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

போலீஸாருக்கான குடியிருப்புகள் கட்ட இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.இந்த ஆண்டு 3000 குடியிருப்புகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காவலர்களுக்கான உணவுப் படி, இடர் படி ஆகியவை உயர்த்தப்படும்.

பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகக் காவல்துறைக்கு 4 ஆயிரம் ஆண், பெண்காவலர்கள் தேர்வு செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில்ஓய்வுபெறும் காவலர்களுக்குப் பதிலாக கூடுதலாக 1500 காவலர்களும் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

இவர்களைத் தவிர கடலோரக் காவல்படை, அதி விரைவுப் படை மற்றும் முக்கியஇடங்களில் பாதுபாப்பு பணி ஆகியவற்றுக்காக மேலும் 2000 பேர் இந்த ஆண்டுதேர்வு செய்யப்படவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 37 புறக் காவல் நிலையங்கள் முழு நேரக் காவல்நிலையங்களாகமாற்றப்படும். புதிதாக 15 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார் முதல்வர்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X