For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
ஒரிஸ்ஸாவில் குறைந்து வரும் புலிகள் எண்ணிக்கை

பாரிபதா (ஒரிஸ்ஸா):

ஒரிஸ்ஸா மாநிலத்தின் 31 வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. இதில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தெரிந்துளளது.

ஒரு வார காலம் இந்த கணக்கெடுப்பு நடந்தது. மே 7-ம் தேதி கணக்கெடுப்பு துவங்கியது. வன அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர்.

புலிகளை அடையாளம் காண்பதற்காக குறிப்பிட்ட அடையாளங்கள் வனத்தில் விடப்பட்டன. இதன் மூலம் எத்தனை புலிகள் மற்றும் சிறுத்தைகள்காடுகளில் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

கணக்கெடுப்பிற்காக டைகர் டிரேசர் என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவியை சரோஜ் ராய் செளத்ரி என்பவர் கண்டுபிடித்தார். இவர் இப்போதுஉயிருடன் இல்லை. சிம்லிபால் புலிகள் சரணாலயத்தின் முதல் கள இயக்குநர் சரோஜ்.

1998-ம் ஆண்டு மே மாதம் கடைசியாக புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அப்போது 194 புலிகள் காடுகளில் இருந்தன. இவற்றில் 87 ஆண் புலிகள், 57பெண் புலிகள், 39 குட்டிகள், 11 பாலினம் தெரியாக புலிகள் இருந்தன. சிம்லிபால் சரணாலயத்தில் மட்டும் 98 புலிகள் இருந்தன.

இந்த முறை நடந்த கணக்கெடுப்பில் சிம்லிபால் சரணாலயம் சேர்க்கப்படவில்லை. 1998-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் ஒரிஸ்ஸாவில் மொத்தம்401 சிறுத்தைகள் இருந்தது தெரிய வந்தது. இவற்றில் 151 ஆண்கள், 179 பெண்கள் 54 குட்டிகள் அடங்கும். இவற்றில் சிம்லிபால் சரணாலயத்தில் 114சிறுத்தைகள் இருந்தன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X