தமிழகத்தில் இன்று
டெல்லி:
வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழியை நிரூபித்திருக்கிறார்கள் 3 போலீசார்.
கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய போலீசாரே பொது மக்களிடம் கொள்ளையில் இறங்கினர். இவர்களில் 2 பேர் தலைமைக்காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இந்த போலீஸ் கும்பல் இயங்கி வந்தது. இதுகுறித்து துணைப் போலீஸ் கமிசனர் சர்மா கூறியதாவது:
டெல்லியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர்கள் அசோக் குமார் மற்றும் குலாப் சிங். இவர்கள் இருவரும்கான்ஸ்டபிள் ஒருவருடனும், மேலும் மூன்று பேருடனும் சேர்ந்து கொண்டனர்.
பின்னர் இந்த மூவர் கூட்டணி திட்டமிட்டு ஒருவரிடம் ரூ 3 லட்சத்தைக் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் ஷாகார்பூர் பகுதியில் உள்ள ஷிபூரா ஹோட்டல்அருகே நடந்தது. போலீசாரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இந்த மூன்று பேரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் பொதுமக்கள் போலீசார் தங்களைக் குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றுவார்கள்என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களே குற்றவாளிகளாக மாறுவது காவல்துறைக்குக் கிடைத்துள்ள அவமானமாகும்.
இவர்கள் பல்வேறு இடங்களில் ஏமாற்றுவேலை, பணம்பறித்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்கள். டெல்லிபோலீசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்த இவர்களைக் கைது செய்து விட்டோம். தற்போது அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications