For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ..கட்சியின் பதவிகளில் இருந்தவர்கள்,அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் என்ற இடத்தில் இருந்தும் நீக்கப்பட்டனர்.சமீபகாலங்களின் பல அதிரடி மாறுதல்கள் அ.தி.மு.க.வில்!

தினகரனுக்காக ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கை என்று வெளிப்படையாகவேசொல்கின்ற நிலை! நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள், முப்பத்தாறு மாவட்டச்செயலாளர்கள்(6 மாதத்திற்கு முன்பு இறந்துபோனவர் கூட)நீக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஜெயலலிதாவின் இந்த அதிரடி முடிவுகளுக்குப் பின்.. ஒரு சர்வே டீம் இருக்கிறதுஎன்றார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. பலஎதிர்ப்புக்கிடையில் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். அந்த நேரத்தில், கட்சியில்தனக்கு நம்பகமான ஆட்கள், நபர்கள், யார் யார் என்பதை தெரிந்துகொள்ளடெல்லியில் உள்ள ஒரு டீமை ஏற்பாடு செய்தார். அந்த டீம் கொடுத்த ரிப்போர்ட்டின்படி பல அதிரடி முடிவுகளை சந்திரபாபு நாயுடு எடுத்தார். இன்று யாரும் அசைக்கமுடியாத அளவு இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத் சென்றிருந்த ஜெயலலிதாவுக்கு இந்த சர்வேடீம் பற்றி தெரிய வர. நாயுடுவிடமே பேசினாராம் ஜெயலலிதா. நாயுடுவும் ..தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று டெல்லி சர்வே டீம் பற்றிச்சொல்ல. ஜெயலலிதாவும் அமைத்துக் கொண்டார் என்று சொன்னார் அந்த அ.தி.மு.க.பிரமுகர்.

தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் சுற்றி.விசாரித்து ஒரு ரிப்போர்ட தயார் செய்துகொடுத்தது -இந்-த டீம். தினகரனோ சசிகலாவோ கட்சியின் முக்கிய தலைமைப்பதவிக்கு வந்தால்.. யார் யார் எதிர்ப்பார்கள் என்பதுடன் கட்சிப் பிரமுகர்கள் பற்றியதனி ரிப்போர்ட்டையும் கொடுத்தார்களாம் சர்வே டீம். அதன்படி தான் அ.தி.மு.க.வில்பல அதிரடி நடவடிக்கைகள்! என்கிறார் ஒ-ரு அ.தி.மு.க.பிரமுகர்.

தேர்தலுக்கு முன் இந்த சர்வே ரிப்போர்ட்டை வைத்துத்தான் தொகுதி பங்கீடு உட்படஎல்லா விஷயங்களும் பேசப்படுமாம்.

த.மா.கா. தரப்பில் தேர்தலுக்கு முன் இன்னும் சில மாற்றங்கள் இருக்கிறது.இப்பொழுது, என்ன அவசரம் என்று கூட்டணி -வி-ஷத்-தை கொஞ்-சம் -கி-டப்-பில்--பாட்-டுள்-ள-னர் த.மா.கா.வினர்.

அ.தி.மு.க. வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலம் என்ன? எவ்வளவு ஓட்டுக்கள்கிடைக்கும் என்பது உட்படகூட்டணி கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்குபற்றியும் ஸ்பெஷல் டீம் சர்வே செய்ததாம்.

கடந்த பார்லிமெண்ட் தர்தலில் த.மா.கா. தனித்து நின்றது. அ.தி.மு.க. தனித்துநின்றது. அ.தி.மு.க. அணியோடு த.மா.கா. சேர்ந்திருந்தால் முடிவு வேறு மாதிரிஇருந்திருக்கும் என்று, கடந்த சட்டசபை இடைத்தேர்தலின் போது ஜெயலலிதாதெரிவித்தார். ஆனால், இடைத் தேர்தலில் த.மா.கா ஆதரித்த பின்னரும் 3தொகுதிகளிலும் அ.தி.மு.க. படு தோல்வியடைந்தது.

இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு. த.மா.கா. மீதுள்ள தனது கணிப்பை மாற்றிக்கொண்டார் ஜெயலலிதா. த.மா.கா. அ.தி.மு.க.வுடன் சேர்ந்ததால் ஒரு ஆதாயமும்ஏற்படவில்லை. சேர்வதாலும் எந்த ஆதாயமும் ஏற்படபோவதில்லை என்ற முடிவிற்குஜெயலலிதா வந்திருப்பதாகத் தெரிகிறது என்றார்கள் அ.தி.மு.க. பார்வையாளர்கள்.

இதன் பிரதிபலிப்பாகத்தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற் குழு கூட்டத்தின்போது, ஆட்சியில் பங்கு என்ற த.மா.கா.வின் கோரிக்கையை நிராகரித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X