நிகழ் காலத்தில் நில்!
Subscribe to Oneindia Tamil
கோவில் குளத்தில் ராட்சச ஆமை
கோழிக்கோடு:
கூலித்தொழிலாளர்கள் கோவில் குளத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த 75 கிலோ எடையுள்ள மிகப்பெரிய ராட்சச ஆமை கண்டெடுத்தனர்.
இந்த ஆமை கோழிக்கோட்டில் உள்ள பிரபல கோவிலில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் பூஜாரி சூரியகாந்த் கூறுகையில் தான் 15வருடங்களுக்கு முன் மத்தியப்பிரதேசத்தில் சாகர் பகுதியிலிருந்து இந்த ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்து கோழிக்கோட்டில் உள்ள பைரவர் கோவிலில்உள்ள குளத்தில் விட்டேன்.
இப்போது அந்த ஆமை 75 கிலோ எடையுடன் மிகப்பெரிய ராட்சச ஆமையாக வளர்ந்து விட்டது என்றார்.
இந்தக் கோவிலில் உள்ள குளம் சுத்தம் செய்யப்படுவதால் அந்த ஆமை வெளியே எடுக்கப்பட்டு பக்கத்திலுள்ள கிணற்றில் விடப்பட்டுள்ளது.
குளம் சுத்தம் செய்யப்பட்டவுடன் அந்த ஆமை மீண்டும் குளத்தில் விடப்படும்.


Click it and Unblock the Notifications
