தமிழகத்தில் இன்று
சென்னை:
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கோரி பேரணி நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணி வரும் ஜூன் 5 ம் தேதி சென்னையில் நடக்கும். இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரணி வள்ளுவர் கோட்டத்தில்தொடங்கி பனகல் பார்க்கை வந்தடையும்.
இந்தியா தொடர்ந்து தனித்தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், இலங்கைப் பிரச்சனைக்கு ராணுவ உதவி எதுவும் செய்யக்கூடாதுஎன்பதை வலியுறுத்துவதாக பேரணி அமையும்.
விடுதலைப்புலிகள் கண்டிப்பாய் இலங்கை ராணுவத்தினருடன் போர் புரிந்து யாழ்ப்பாணத்தை மீட்காமல் விடமாட்டார்கள். அடுத்தடுத்து வெற்றி பெறும்அவர்கள் கண்டிப்பாய் யுத்த களத்தில் வெற்றி பெறுவார்கள்.
தனிஈழத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு தராது என்று கூறியபின்னும் தனிஈழத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்பேரணியில் வலியுறுத்தப்போவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.
கில்லுக்கு எதிர்ப்பு:
முன்னதாக முன்னாள் பஞ்சாப் போலீஸ் டைரக்டர் ஜெனரல் கே.பி.எஸ்.கில் இலங்கைக்குச் சென்று அங்கு நடக்கும் போர் குறித்தும், இலங்கை அரசின்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவருக்கு இலங்கை செல்வதற்கான பாஸ்போர்ட்டை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை சென்னை சாஸ்த்திரிபவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் மதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
யு.என்.ஐ.