For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
100 நாட்களில் 10,000 கார்கள் விற்று மாருதி நிறுவனம் சாதனை
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவனம் 100 நாட்களில் 10,000 புதிய வேகன்-ஆர் ரகக் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
பிற சிறிய கார் தயாரிப்பு நிறுவனங்களை அடுத்து மாருதி உத்யோக் நிறுவனமும் வேகன்-ஆர் என்ற புதிய ரக சிறிய கார்களைத் தயாரித்து வருகிறது. இக்காருக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் உள்ளது.
நவீன காலத்துக்கு ஏற்ற வகையில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத இன்ஜினுடன் இந்த வேகன்-ஆர் கார் தயாரிக்கப்படுகிறது. கடந்த 100 நாட்களில்மட்டும் சுமார் 10 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்ப்டுள்ளன.
வேகன்-ஆர் எல்எக்ஸ், வேகன்-ஆர் விஎக்ஸ் என இரு வகைகளில் இக் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்பான சான்ட்ரோகாருக்குப் போட்டியாக இந்த வேகன்-ஆர் கார்கள் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.