For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தயாராகிறது உலகின் மிகப் பெரியசெயற்கைக் கோள்
பாரிஸ்:
இதுவரை இல்லாத அளவுக்கு உலகின் மிகப் பெரிய செயற்கைக் கோள் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
2002-ம் ஆண்டு, பிரெஞ்சு கயானாவிலுள்ள கொரு ஏவுதளத்திலிருந்து "ஏரியான்--5 ராக்கெட் மூலம் "அனிக் எப்டூ என்ற இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். தொலைத் தொடர்பு செயற்கைக் கோளாகும் இது.
இந்த செயற்கைக் கோளின் எடை 5.9 டன் எடை கொண்டதாகும். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களிலேயே இதுவே மிக அதிக அளவுஎடை கொண்டதாகும்.
ஹியூக்ஸ் ஸ்பேஸ் அன்ட் கம்யூனிகேஷன் நிறுவனம் இந்த செயற்கைக் கோளை உருவாக்கவுள்ளது.