For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காவிரிப் பிரச்சினை: அமைச்சர் மன்னிப்பு கேட்க ஜெ. கோரிக்கை

சென்னை:

காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்றும் கருணநிதிஅரசின் செயலை தட்டிக்கேட்ட விவசாய சங்கப்பிரதிநிதியையும்,எம்.பி.,க்களையும் மிரட்டி தாக்க முயற்சித்தசெயலுக்கு அமைச்சர் கோ.சி.மணி பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களைச்சேர்ந்த விவசாயசங்கப் பிரதிநிதிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டகலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, மேட்டூர்அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவது பற்றி கூட்டம் நடந்துள்ளது.

அப்பொழுது கருத்துக்களை கேட்டறிந்தபோது விவசாய சங்கத்தலைவரை, அமைச்சர் கோ.சி.மணி அவமரியாதை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் 81.71 அடி உயரத்திற்குதண்ணீர் இருந்த போது இதே போன்று விவசாயசங்கப்பிரதிநிதிகள் கூட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர்வீரபாண்டிஆறுமுகம் கூட்டினார். குறிப்பிட்டபடி ஜூன் 12-ம்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதி அளித்தார்.

சில தினங்கள் கழித்து பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்செய்துவிட்டு, காவிரிப்பாசன வாய்க்கால்களில் தூ

ர் வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறந்துவிடுவதில் சற்றுகாலதாமதம் ஆகும் என்று கூறினார்.

இதை காவிரிப்பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டதாகவும்தெரிவித்தார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக தி.மு.கஅமைச்சர்கள் அறிவிப்பு செய்தனர். இதனால் குறுவை சாகுபடிநடவுக்கு விட்டிருந்த நாற்றுகள் காய்ந்து நாசமானதும்அரைகுறையான பாசனத்தால் விளைச்சல் காலியாகி நிலங்களில்வெடிப்பு ஏற்பட்டதும்தான் கடந்த ஆண்டு விவசாயிகள் கண்டபலன்.

கடந்தகால அனுபவத்தையும் தி.மு.க அமைச்சர்களின்தடுமாற்றமான அறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு நேற்றுதஞ்சை நகரில் நடந்த ஆலோசனைக்கு கூட்டத்தில் திருவாரூர்மாவட்ட விவசாய சங்கத்தலைவர் கலியமூர்த்தி தனது கருத்தைதெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத அமைச்சர்கோ.சி.மணி அவரை மிரட்டி இருக்கிறார். இதற்குபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையாளராகஇருந்திருக்கிறார். இப்பொழுது மேட்டூர் அணையில் 105 அடிஉயரத்திற்கு தண்ணீர் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு ஜூன்12-ம் தேதியே தண்ணீர் திறந்து விடவேண்டும்.

இல்லாவிட்டால் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கலியமூர்த்தி தெரிவித்து , காவிரி நீர்பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்துவிட்டோம் என்று சொல்லுகிறஅரசு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீரைத் திறந்து விடுவது பற்றிஉறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

கலியமூர்த்தியின் கருத்துக்கு ஏற்ற பதிலைத் தர முடியாத தி.மு.க ,எம்.எல்.ஏ ஒருவர் அவரை மிரட்டியிருகிறார். அவர் மீது பாய்ந்துதாக்கவும் முயற்ச்சித்திருக்கிறார். விவசாய சங்கப் பிரதிநிதியின்கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை மிரட்டுவது சரியல்ல என்றுஒ.எஸ்.மணியன் எம்.பி கேட்டபோது அவரை அமைச்சர்கோ.சிமணி அலட்சியப்படுத்திதரக்குறைவாகப்பேசியிருக்கிறார்.

தி.மு.க எம்.எல்.ஏ வின் அநாகரிகச் செயலைக் கண்டித்துகூட்டத்தில் இருந்த விவசாய பிரதிநிதிகள் வெளிநடப்புசெய்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி.மணிசங்கர் ஐயர் , மீண்டும் அனைவரையும் அழைத்துக்கொண்டுஅரங்கத்திற்குள் சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விஎழுப்பியபோது அவரையும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் தாக்கமுயற்சித்து இருப்பதாக தெரிகிறது.

காவிரிப் பிரச்சனையில் சுமூகமான ஒப்பந்தத்தைபோட்டிருப்பதாக மக்களை ஏமாற்றும் கருணாநிதி அரசின்செயலை தட்டிக்கேட்ட விவசாய சங்கப் பிரதிநிதியையும் ,எம்.பியையும் மிரட்டி தாக்க முயற்சித்த செயலுக்கு அமைச்சர்கோ.சி.மணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுஜெயலலிதா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X