For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஒ-ரு நீண்-ட மெள--னம் கலைந்-த-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

நீண்ட மவுனத்திற்கு பிறகு தமாகாவுடனான உறவு நீடிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருப்பம்தெ-ரிவித்துள்ளார். இதையடுத்து இவ்விரு கட்சிகளுக்கும் இடையே -நிலவி வந்த லேசான கசப்புணர்வு மறையத் துவங்கியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த -நாளில் இருந்து கூட்டணி ஆட்சி என்ற கோ-ரிக்கையை தமாகா வலியுறுத்தி வருகிறது. 2001ல்-நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமாகா பங்கு பெறும் வகையில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதுதான் -மூப்பனா-ரின் தேர்தல் கனவு.

இதை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொள்வார் என்று ஆரம்பத்தில் அவர் கருதினார்.

ஆனால், தமக்கும், தமது கட்சிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பயன்படுத்தி மூப்பனார் அரசியல் பேரம் பேசுகிறார் என்று-நினைத்த ஜெயலலிதா, கூட்டணி ஆட்சி கோ-ரிக்கையை அடியோடு -நிராக-ரித்தார்.

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் அறிவித்தார். இதனால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இருந்த நட்புறவில்கசப்புணர்வு கலந்தது. கூட்டணி ஆட்சிக்கு ஜெயலலிதா சம்மதம் தெரிவிக்காத காரணத்தால், தமிழக காங்கிரசுடன் சேர்ந்து புதியஅணியாக செயல்பட -மூப்பனார் -முடிவெடுத்தார்.

தேசிய அரசியலில் ஜெயலலிதா காங்கிரசை நம்பியே இருக்க வேண்டும் என்பதால், தமிழக காங்கிரசை கைக்குள் வைத்துக்கொண்டால், ஜெயலலிதா வழிக்கு வந்து விடுவார் என்றும் அவர் கருதினார். அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர்களை எல்லாம்தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை வெளியுலகத்திற்கு உணர்த்தும் வகையில் தேனியில் கூட்டுப் போராட்டம் நடத்தினார்.அதி-முகவை அழைக்காமல் இரு கட்சிகளும் -நடத்திய இப்போராட்டம் இனியும் தொடரும் என்றும் அறிவித்தனர்.

அதிமுக தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ள தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் ஏற்பட்டகருத்து வேறுபாடுகள் காரணமாக தனித்தனியாக செயல்படத் துவங்கினால், வரவிருக்கும் தேர்தலில் அவை எதிரொலிக்கத்துவங்கி விடும் என்பதால் ஜெயலலிதா சற்று இறங்கி வந்துள்ளார்.

அதற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணியே முக்கிய காரணமா-வா-ர். தஞ்சையில் தனது கல்லூ-ரி விழாவுக்கு இக்கட்சித்தலைவர்களை எல்லாம் ஒரே மேடைக்கு வரவழைத்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜெயலலிதாவும், மூப்பனாரும் ஒரேமேடையில் பேசிய -நிகழ்ச்சி இதுதான். இதில் பேசிய ஜெயலலிதா, அதி-முக - தமாகா -நல்லுறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றுவிருப்பம் தெ-ரிவித்தார்.

மூப்பனார் -முன்னிலையில் அவர் தெ-ரிவித்துள்ள விருப்பம், இரு கட்சிகளுக்கும் இடையே -நிலவி வந்த கருத்து வேறுபாடுகள்நீங்க காரணமாக அமைந்து விட்டது என்று அதி-முக வட்டாரம் கருத்து தெ-ரிவித்தது.

அதேபோல் ஜெயலலிதாவின் இந்த மனமாற்றத்தை பயன்படுத்தி தங்களின் கூட்டணி ஆட்சிக் கோரிக்கையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமாகா வட்டாரம் தெ-ரிவித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X