Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஒரு பொண்ணு வாய் திறந்து கேட்டுட்டாளே; மறுக்கிறது பாவம்ன்னு நினைச்சி,சரின்னு இணங்குனாம். அவளைப் பிரிய முடியாம, பொயிட்டு வரேம்னு சொல்லிட்டுமலங்காட்டுங்குள்ள கொஞ்ச தூரம் போயிருப்பாம்.

அடுத்த மூணாவது பொண்ணு வந்து மறிச்சா. மச்சாம் எங்கள விட்டுட்டுப்போறீரான்னு அவன ஆவிசேத்துக் கட்டிப்பிடிச்சா. இவனுக்கு ஒன்னும் ஓடல.

ஒம்ம பேர்ல எம்புட்டு ஆசை வச்சிருந்தேம். எனக்குக் கிடைக்காமப் பொயிட்டீரெ.வாரும் ஒரு வாய் வார்த்த எனக்கு சொல்லும். என்னத் தூக்கிக் கோரும்ன்னா, பச்சப்பிள்ள போல,

இம்புட்டு ஆசெயவும் இத்தன நா எங்க வச்சிருந்தெ. ஒரு ஆசைப்புலகூட நீசொல்லலையேன்னு கேட்டாம். பொட்டச்சி எப்பிடி சொல்லுவா. உடம்பயும் வாயவும்பூட்டித்தாம் வச்சிருப்பா. சொப்பனத்துலதாம் ஒம்மகூட பேசுததும் இருக்கதும்ன்னா.

சத்தோடம் இரியும். எங்கிட்டயும் நல்லாப் பொல்லா இரியும்ன்னு வற்புறுத்தினா.அதுபடியே அவள்டயும் இருந்தாம்.

அவள விட்டு விலகி அந்த அத்துவான மலங்காட்டுக்குள்ள நடந்தாம்; செடிங்காடும்பாறைக்காட்டையும் தாண்டி மலைக்கு அந்தப் பக்கம் போகனும். அப்ப, அவனோடகடேசி மச்சினி ஓடிவந்து மறிச்சா.

வருவாளோன்னு நினைச்ச மாதிரியே வந்துட்டா; எந் பங்கு சூத்தைப்பங்கான்னுட்டு.

ஏம் இப்படி ஓடி வாரே. நா எனஅன வராமயா போயிருவேம்? யாரு கண்டா; நீருஇப்படி எங்க வீட்டுக்கு வருவீருன்னு நாங்க சொப்பனமாவது கண்டமா. யாருக்கு எதுவரும் வராதுன்னு என்ன நேரம் எப்பிடிச் சொல்ல முடியும்னு கேட்டா.

ஒரு பாறை நிழல்ல கொஞ்சம் உக்காந்தாக. தண்ணி தவிக்கி எனக்குன்னாம்.வாரும்ன்னு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப்போனா. அங்கெ ஒரு சுனை இருந்தது.தண்ணியக் குடிச்சிட்டு, சந்தோடம் அவ மடியில தலை சாச்சிப்படுத்து ஒரு கோழித்தூக்கம் போட்டாம்.

அவளோட ஆசைப்படியே அவளோடவும் நல்லாப்பொல்லா பேசி இருந்துட்டு அவளஅனுப்பிவச்சிட்டு மலை மேல ஏறுனாம்.

மலை உச்சிக்கு வந்து மலையத் தாண்டி சரிவில இறங்க எறங்க ஆரம்பிச்சப்பதாம்அவனுக்காக தருமசாரா கரடி உருவத்துல அங்கன நிக்கதப் பாத்தாம். பதறிபரிதவிச்சாம்.

இந்தப் தபா தப்ப முடியாது டோய்ன்னு இவம் மேல வந்து விழுந்தது கரடி.

யாரக் கூப்டாலும், என்ன அவயம் போட்டாலும் ஒண்ணும் நடக்கல அந்தக் கரடியிட்ட.சவமாக்கிட்டது அவன. பெத்தவங்களுக்குப் பிள்ளயில்ல. உத்தவளக்குப் புருசன்இல்ல. மத்தவங்களுக்கும் ஒண்ணுமில்ல. அனாதப் பிணமாக் கிடந்து நரியும்,கழுகுகளும் வந்து எலும்புக்கூடுத தவிற மத்த எல்லாத்தையும் காணாமடிபண்ணிட்டது. யாரு வந்து பாத்தாலும் அடையாளந் தெரியாது.

ஆயிட்டது பத்து மாசம்.

அந்த நாலு பொண்ணுகளுக்கும், ஆணும் பொண்ணுமா நாலு பிள்ளைக பிறந்தது.பிறந்த ஒண்ணெண்ணும், என்னப்பாறு ஒன்னப்பாருன்னு அவங்கெணக்கவேஅச்சுக்குலையாக அப்பிடியே இருக்கு.

அந்த வீட்டுக்கு வந்த வங்கு, சொங்கு, சொறி இந்த மூனு மாப்பிளைகளுக்கும் அந்தபிள்ளகளப் பாத்து சந்தேகம் வந்துட்டதாம். என்னாட்டி இவளுகளா பிள்ளக உங்கமச்சாவி மாதிரியே இருக்குன்னு கேட்டதுக்கு,

முத்தவளுக்கு நேரா இளையவ சொன்னாளாம்:

நா தலைக்கு ஊத்திக்கிட்டு ஆத்தங்கரையிலயிருந்து வாரயில அக்கா புருஷன் மச்சாவிஎதுக்க வந்தாரு. அதுதேம் புள்ள அவரு கெணக்கேவே பிறந்திருக்கு.

அடுத்தவ சொன்னாளாம்:

நா முழுவப்போய வவுத்தவலியோட முனகிக்கிட்டு கிடக்கயில மச்சாவி பாத்து ஒருகனியக் கொண்டாந்து தந்து திங்கச் சொன்னாரு. வர நினைச்சிக்கிட்டே தின்னெம்.அதனால அவரப் போலவே பிள்ள பிறந்திருக்கு.

கடேசிக்காரி சொன்னாளாம்:

நா தலைக்கு ஊத்துன கையோட வீட்டுல பாத்தா தலைக்குத் தேய்க்க கரம்பை(களிமண்) இல்ல. முகத்துக்குத் தேய்க்க மஞ்சளும் இல்ல. வெறுந்தலைக்கு என்னத்தஊத்தன்னு விசனத்தோட இருந்தப்ப மச்சாவி வந்து என்னன்னு கேட்டாரு; நா விசயத்தசொன்னே. அப்பவே போயி மஞ்சக் கிழங்கோட தலைக்குத் தேய்க்க கரம்பையும்கொண்டாந்து தந்தாரு. அவர நினைச்சிக்கிட்டே குளிச்சதுனால அவரப் போலயேபிறந்துட்டதுன்னா.

மூனுபேரு சொன்னதக் கேட்ட மூனு புருசன்மாருக்கும் சந்தோசம் வந்துட்டதாம்.நல்லவேள, எங்களைக் கெணக்க பிறக்காம இப்பிடியாவது பெத்தீகளேன்னு.

ஊருக்குப் போனவம் எப்ப வருமாம்; பிள்ளகளக் காமிச்சி சந்தோசப்படனும்ன்னுகாத்துக்கிட்டிருந்தாக.

பெத்தவுக பிள்ள எப்ப வருவாம்னு ஊர்ல காத்துக்கிட்டிருந்தாக, காத்துக்கிட்டேஇருக்காக வந்துருவாம்னு நம்பிக்கையில.

யாருக்குத் தெரியும் நடந்தது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+