தமிழகத்தில் இன்று
கல்லூரி முதல்வரை காதல் படுத்திய பாடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காதல் "நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி முதல்வர், தான் மணக்க விரும்பிய பெண்இன்னொரு நபரை மணக்கவிருப்பதை அறிந்து ஆத்திரமுற்று, புது மாப்பிள்யைைக்கடத்திச் சென்றார்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் திருமலை (42). இவர் சென்னையிலுள்ள ஒரு என்ஜீனியரிங்கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்தார். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றையும்நடத்தி வந்தார். இந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் மைலாப்பூரைச் சேர்ந்த விமலா(25) என்ற பெண்ணுக்குத் தனது கல்லூரியிலேயே வேலை போட்டுக் கொடுத்தார்.
விமலா மீது திருமலைக்கு ஒரு தலைக் காதல் இருந்துள்ளது. இந்த நிலையில்,விமலாவுக்கும் அவரது உறவினர் கவியரசு என்பவருக்கும் திருமணம் நிச்சயம்செய்யப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியுற்ற திருமலை, விமலாவின் வீட்டிற்குச் சென்றுஅவரது பெற்றோரிடம், தான் விமலாவை மணக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால்அதை ஏற்க மறுத்த விமலாவின் பெற்றோர், அவரை வேலைக்கு அனுப்புவதை நிறுத்தினர்.
விமலா, வேலையை விட்டு நின்றாலும் கூட, மனம் தளராத திருமலை தொலைபேசி மூலம்அவரை வற்புறுத்தி வந்தார். இதுதொடர்பாக போலீஸில் விமலா தரப்பினர் புகார்கொடுத்தனர்.போலீஸார் திருமலையைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், 13-ம் தேதி விமலாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த புதுமாப்பிள்ளைகவியரசு, ஒரு டீக்கடையில் நண்பர்களுடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுஒரு காரில் திருமலை, அவரது நண்பர்கள் பாண்டியன், பிளேடு கணேசன், முரளிஆகியோர் வந்துள்ளனர். கவியரசு அவரது நண்பர் தீபக் உள்பட நான்கு பேரைக்கட்டாயப்படுத்திக் காரில் கடத்திச் சென்றனர்.
14-ம் தேதி வரை தனது கே.கே.நகர் வேலைவாய்ப்பு நிறுவன அலுவலகத்தில் அவர்களைதிருமலை அடைத்து வைத்துச் சித்திரவதைப்படுத்தியுள்ளார். 14-ம் தேதி அவர்களைவிடுவித்தார். இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது.
போலீஸார், திருமலை மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!