For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

கே: தமிழகக் காங்கிரஸ் தலைவர்களைப் போல மோசமானவர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லைஎன்கிறாரே குலாம் நபி ஆசாத்...?

ப: சும்மா! காங்கிரஸ் தேசிய கட்சி, மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசம் பார்க்காத கட்சி, அதனால் எல்லாமாநிலங்களிலும் இதே நிலைமைதான்.

கே: தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? (தெரியாமல் கேட்கிறேன்)

ப: மனிதப் பண்பாடு என்பது வேறு: தமிழ்ப்பண்பாடு என்பது வேறு என்பது போல பேசுகிறவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. தமிழர்களை இப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறவன் நானல்ல.

கே: வருங்காலத்தினர் உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

ப: பயமே கிடையாது: கவலையே இல்லை: நிம்மதியாக இருக்கிறது. நான் விரைவில் மறக்கப்படுவேன் என்றதைரியம் எனக்கிருக்கிறது.

கே: வாஜ்பாய் எவ்வாறு செயல்படுகிறார்...?

ப: மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட பல கட்சிகள்: அவற்றின் பல குறுகிய அணுகுமுறைகள். அதனால்ஏற்படுகிற நிர்பந்தங்கள் - என்று பல சுமைகளைத் தாங்கி, ஆட்சி நடத்தவேண்டிய நிலையில் வாஜ்பாய்இருக்கிறார். இதை நினைவில் கொண்டு பார்க்கும் போது, அவருடைய செயல்பாடு நன்றாகவே இருக்கிறது.

கே: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி நாடு திரும்பியுள்ளதே?லஞ்சம் ஏதாவது இதிலும் ஊடுருவி இருக்குமா?

ப: லஞ்சம் இருந்திருந்தால்தான் பரவாயில்லையே! பணம் வாங்கிக்கொண்டு நம்மவர்கள் தோற்று விட்டார்கள்:இல்லையென்றால் நாம் ஜெயித்திருப்போம் என்று நினைத்துக் கொள்ளவாவது வழி இருந்திருக்குமே!இப்போதைக்கு லஞ்சம் இல்லை என்பதால் ஆடத் தெரியாமல் தோற்றோம் என்று ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டதே!

கே: தி.மு.க., த.மா.க., கூட்டணி ஏற்பட இன்னமும் வாய்ப்புகள் உள்ளதா?

ப: இது நடக்காது - என்று இன்றைய அரசியலில், எதையும் கூறிவிட நான் தயாராக இல்லை.

கே: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் பாடல் பற்றி உங்கள்கருத்து என்ன?

ப: நல்ல பாடல், அருமையான கருத்து. பெண்களை பெரிய அளவில் அரசியலுக்கு இழுத்து, அவர்களைக்கேவலப்படுத்தி,பெண்மையையே இழிவுபடுத்த திட்டமிடுகிறவர்களின் மடமைக்கு சரியான சூடு!

கே: 30 ஆண்டுகள் முடிந்தும், இன்னும் காங்கிரஸ் ஆட்சியை தமிழக மக்கள் புறக்கணிப்பது ஏன்?

ப: 1971-ல் காங்கிரஸ், சட்டசபையில் ஒரு இடம் கூட வேண்டாம் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு.தமிழகத்தைப் புறக்கணித்தது. சில எம்.பி.க்களை மத்திய அரசுக்கு ப் பெற்று தருவதற்கு மட்டுமே தமிழகம்இருக்கிறது - என்ற காங்கிரஸின் அணுகு முறை, அதற்குப் பின்னரும் தொடர்ந்தது. இப்படி காங்கிரஸினால்தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வந்ததால்தான் காங்கிரஸை தமிழகம் புறக்கணிக்கிற நிலை தோன்றிவிட்டது.

கே: கி. வீரமணி, சசிகலா, தினகரன் - இவர்கள் கூறும் யோசனைகளில் ஜெயலலிதா யாருக்குமுக்கியத்துவம் கொடுக்கிறார்?

ப: மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதன் பிறகுதான் ஜெயலலிதாவிடம் யோசனை கூறப்படுகிறது -என்பதுதான் நிலை. அப்படியிருக்க யாருக்கு முக்கியத்துவம் என்ற கேள்விக்கு இடமில்லை.மும்மூர்த்திகளிடையே, உ.யர்வு , தாழ்வு இல்லை.

கே: துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைக்காகவும்,வெற்றிக்காவும் நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்.கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் கருணாநிதி கடுமையாக உழைக்கிறார் என்று நீங்களேசான்றிதழ் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரின் உழைப்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னஎன்று சொல்ல முடியுமா?

ப: என் உழைப்பு, வசதியான உழைப்பு, சிரமம் அதிகமில்லை. அவருடைய உழைப்பு அப்படிப்பட்டது இல்லை.

கே; அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின்உத்தரவு பற்றி...?

ப: திருக்குறள் வரும் முன்னே. முதல்வரின் பொன் மொழி வரும் பின்னே! இது அரசு பஸ்கள் தருகிற அனுபவப்பாடம்.

கே: காங்கிரஸ் தன் முடிவை மறுபரிசீலனை செய்யாவிடில், தன் ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்துவிலகி விடுவேன் என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளது பற்றி...?

ப: இந்த ஒரு உதவியினால் மட்டும், காங்கிரஸ் பலம் பெற்று விடாது.

கே: சோனியா போவது இந்திரா காந்தி வழியா ? அல்லது ஜெயலலிதா போலவா?

ப: ஜானகி, லஷ்மி பார்வதி போலவோ? என்ற சந்தேகம் வருகிறதே!

கே: மனிதனை அதிகம் பாதிப்பது அரசியலா? சினிமாவா? துக்ளக்கா?

ப: துக்ளக்தான். இல்லாவிட்டால் இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பீர்களா?

கே: தனியார் வசம் ஒப்படைத்தல் என்றாலே ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?

ப: தனியார் துறையில் வேலை செய்யாமல், பொழுது போக்க முடியாதே? வேலையே செய்யாவிட்டாலும் வேலைநிரந்தரம் - என்ற நிலை மாறி விடுமே? அந்த பயம் தான்!

கே: தற்போது வழக்கறிஞர்களே அதிகம் அரசியல்வாதிகளாக வர விரும்புவது ஏன்?

ப: தன் கட்சி தோற்றாலும், தன் பிழைப்பு கெடாது - என்கிற நிலைக்குப் பழக்கப்பட்டு விட்ட வக்கீல்களுக்கு ஏற்றஇடம் அரசியல்தானே?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X