தமிழகத்தில் இன்று
மைக்ரோசாப்ட் நிறுவன அப்பீல் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அரசு தொடர்திருந்த வழக்கை எதிர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனம் நீதிமன்றத்தில்மனு செய்திருந்தது. அந்த மனு தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அமெ-ரிக்-க அரசு மாவட்ட நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்திருந்தது.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி தாமஸ் பென்பீல்டு ஜாக்சன் ஜூன் மாதம் 7 ம் தேதி பிறப்பித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில்மைக்ரோ சாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கென்று வின்டோ பெர்சனல் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் சங்கேதக் குறியீட்டைப் பயன்படுத்திவருகிறது.
இந்தக் சங்கேதக் குறியீட்டை அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும், சாப்ட்வேர் உருவாக்குபவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சிலகட்டுப்பாடுகளை சாப்ட்வேர் நிறுவனத்திற்கு விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அப்பீல் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டிற்குப் பரிசீலனைக்கு அனுப்பிஉத்தரவிட்டார்.
மேலும் மைக்ரோசாப்ட் மீது விதித்த கட்டுப்பாடுகளை அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அமல்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக இந்தக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 5 முதல் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜாக்சன் கூறியிருந்தார்.
அப்பீல் மனு ஹைகோர்ட்டிற்கு அனுப்பாமல் நேரடியாக சுப்ரீம்கோர்ட்டிற்கு நேரடியாக அனுப்பப்பட்டது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனசெய்தித்தொடர்பாளர் மார்க்மோரே கூறுகையில், இது எதிர்பார்த்ததுதான். கட்டுப்பாடுகளை அமல்படுத்த இடைக்காலத் தடைவிதித்ததைவரவேற்கிறோம் என்றார்.