""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
என்கிற மாதிரி முதலில் சில கேள்விகள் கேட்டார் ஆசிரியர்துரோணர். தருமனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் இதோ.
""மரம் தெரிகிறதா?""
""தெரிகிறது!""
""மரத்தின் கிளை தெரிகிறதா?""
""நன்றாகத் தெரிகிறது""
""கிளையில் உள்ள காக்கை..""
""தெரிகிறது குருவே""
""வில்லையும் அம்பையும் கீழே வை"" என்று தருமனை ஃபெயில் ஆக்கினார் துரோணர். பீமனை அழைத்து இதேகேள்விகளைக் கேட்டார். பீமன் பதில் வேறாக இருந்தது.
""குருவே.. ஒரு காக்கையை வீழ்த்த இத்தனை கஷ்டம் ஏன்? இடது கையால் மரத்தைப் பிடுங்கி கவிழ்த்து வலதுகையால் காக்கையை எடுத்து எறியலாமே ... என்றான் பீமன். தனி யுனிவர்சிடி தொடங்க வேண்டியவன் பீமன்.அவன் சிலபஸ்ஸே வேறு!
துரியோதனனிடம் இதே கேள்விகளைக் கேட்ட போது மரம், கிளை, காக்கை இத்தோடு துரோணரும் தெரிவதாகக்கூறினான். அம்பு விட்டால் ஆசார்யரே செத்தாலும் ஆச்சரியப்பட முடியாது! அப்படி ஒரு படிப்புதுரியோதனனுக்கு. அர்ச்சுனனை அழைத்தார். அவன் பதிலோ வேறாக இருந்தது.
""மரம் தெரிகிறதா?""
""இல்லை""
""கிளை தெரிகிறதா?""
""இல்லை""
""காக்கை தெரிகிறதா?""
""இல்லை""
மரமும் காக்கையும் தெரியவில்லை என்றதும், அர்ச்சுனன் கண் போய் விட்டது என்று ஆனந்தப்பட்டான்துரியோதனன். தன் பலத்தால் ஜெயிப்பதை விட எதிரியின் பலவீனத்தால் ஜெயிக்கும் அல்ப புத்தியே துரியோதனஅரசியல்.
""மரமும், கிளையும், காக்கையும் தெரியவில்லை என்றால் என்னதான் தெரிகிறது?"" என்றார் துரோணர்.""காக்கையின் கழுத்து மட்டுமே தெரிகிறது"" என்றான் அர்ச்சுனன். இலட்சியத்தில் மனம் எப்படி குவிய வேண்டும்என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். இந்த மன ஒருமை எப்படி வரும்?


Click it and Unblock the Notifications
