For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: தமிழ்நாடு காங்கிரஸ் - சிறு குறிப்பு வரைக!

ப: இருந்தது

கே: தி.மு.க. வின் தற்போதைய நான்காண்டு கால ஆட்சியின் சாதனை, கடந்த 50ஆண்டுகளில் இல்லை - என்று சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்கூறியிருக்கிறாரோ? ஏற்றுக் கொள்கிறீர்ளா?

ப: கடந்த 50 ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. அதுஅசல் தண்டம் என்று சபாநாயகர் நினைத்தால், அதற்கு நாம் என்ன செய்ய?

கே: ஃபிஜி நாட்டில் இனி ஜனநாயகம் திரும்ப வாய்ப்பு உள்ளதா?

ப: வாய்ப்பு இருக்கிறது.

கே: ஒரு ஆண் பொய் சொல்வதற்கும் , ஒரு பெண் பொய் சொல்வதற்கும் என்னவேறுபாடு உள்ளது?

ப: ஆண்கள் பொய் சொன்னால், அது பற்றி அவர்கள் வெட்கப்படுவார்கள். அல்லதுபயப்படுவார்கள். பெண்கள் பொய் சொன்னால், அது ஒரு பெரிய விஷயமாகஅவர்களுக்குத் தெரிவதில்லை. அது சர்வ சாதரண விஷயமாகவே அவர்களுக்குத்தெரிகிறது.

கே: பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள்இருக்கிறதே! ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்?

ப: ஏன் ஆண்களுக்கும் இருக்கிறதே! பிறந்த வீடு. இழந்த வீடு.

கே : ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு பெண்களை வளர்க்கவேண்டும் பெண்களுக்கு ஆண் உடையை அணிவிக்க வேண்டும் என்ற டாக்டர்ராமதாஸின் முற்போக்கு எண்ணம் குறித்து...?

ப: அவருடைய பேச்சு முற்போக்கு அல்ல: பொழுது போக்கு.சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர் சொல்கிற மாதிரி கோமாளிகள் ஆகிவிட பெண்கள் ஒன்றும் காத்துக்கொண்டிருக்கவில்லை.

கே; இலங்கைப் பிரச்சனையில் பா.ஜ.க.வின் கருத்துதான் என்ன?

ப: முதலில் இப்பிரச்சனை பற்றி. அவர்களுக்கு ஒரு கருத்து ஏற்படட்டும்: அதற்குப்பிறகுதானே அது பற்றி நாம் ஏதாவது சொல்ல முடியும்.

கே: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியை, தலைவர்பதவியிலிருந்து நீக்கிய பிறகு, அவர் நடந்து கொண்ட முறை பற்றி என்னசொல்கிறீர்கள்...?

ப: முதலில் ஆத்திரப்பட்டு என்னென்னவோ பேசி விட்டார்: பிறகு தன் நிலை உணர்ந்து.தடுமாற்றத்திலிருந்து விடுபட முடிவெடுத்து குழைந்திருக்கிறார். குழைவு பலன்அளிக்கக்கூடும்.

கே: பெண் - சிறு குறிப்பு வரைக...?

ப:வம்பு. (நான் உங்கள் கேள்வியைப் பற்றி கருத்து சொன்னால், நீங்கள் அதையே பதிலாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்)

கே: தெற்கு ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசன் வீட்டில் நடந்தசி.பி.ஐ.சோதனை பற்றி...?

ப: இதற்கு கீர்த்திவாசன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் சொல்வது ஏற்கக்கூடியதாஇல்லையா என்பது பற்றி அபிப்ராயம் கூறுகிற அளவுக்கு, தகவல்கள் இன்னமும்வெளியாகவில்லை. ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்.

கே:ஒரு முதல்வருக்குத் தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊழல் செய்துவிட முடியும் என்று தாங்கள் நம்புகிறீர்களா?

ப: முதல்வருக்குத் தெரியாமல் ஒரிரு முறை செய்ய முடியும். மீண்டும் மீண்டும் செய்தால்,அது முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிற காரியமாக இருக்காது.

கே: சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்கள் என்ன ஆகுமோ என்றுபயப்பட வேண்டாம். புராண காலத்தில் ராமனுக்கும் சீதைக்கும் நாள் நட்சத்திரம்பார்த்துத்தான் திருமணமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றது. அவர்கள் 14 வருடம்வனவாசம் செய்யவில்லையா? என்று முதல்வர் பேசியுள்ளாரே...?

ப: நாள் நட்சத்திரம் பார்த்ததால், அவர்கள் 14 வருடம் கழித்து சிறப்புடன் நகரத்திற்குததிரும்பி வந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்காமல் கல்யாணம்செய்து கொண்டிருந்தால், காட்டிலேயே ஏதாவது சிங்கம் , கரடியால் தாக்கப்பட்டுசெத்திருப்பார்களோ, என்னவோ!

கே:ஒரு நல்ல அரசியல்வாதியின் இலக்கணம் என்ன? ( கிண்டல் இல்லாமல்சீரியஸான பதில் தேவை).

ப: இதற்கெல்லாம் கிண்டல் இல்லாமல் பதில் சொல்ல முடியாது. நியாயமானஇலக்கணத்தைச் சொன்னால் - இந்த காலகட்டத்தில், அது கிண்டலாகத்தான் தெரியும்.

கே: உங்கள் பிறந்த நாளின் போது நிதி வசூலித்து உங்களிடமே தரஎண்ணியுள்ளோம். அப்போதாவது உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும்நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தருவீரகளா?

ப: உங்களால் நிறைய நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால்கொள்கை அடிப்படையில், பிறந்த நாள் கொண்டாட மறுக்கிறேன்.

கே: வரும் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்துவந்தால், தமிழக மக்களைப் பற்ரி என்ன நினைப்பீர்கள்...?

பச ஊழல் புகார்களை விட, மற்ற பல விஷயங்கள்தான் மக்கள் மனதில் பெரியவிஷயங்களாகத் தெரிகின்றன - என்றுதான் நினைக்க வேண்டியிருக்கும்.

கே: ஒருவர் நியாயம் பேசுகிறார் என்றால், அவருக்கு அநியாயம் செய்ய வாய்ப்புகிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்? ( தயவு செய்து தங்களைக் கூறுவதாகநினைத்துக் கொள்ள வேண்டாம்)

ப: அநியாயம் செய்ய இஷ்டமில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.(நானும் என்னைப்பற்றிக் கூறவில்லை)

கே: இலங்கை விஷயத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த ஜெயலலிதா,இப்பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நிலை சரியானதே என்று கருத்துகூறியுள்ளாரே?

ப: நேரம் கழித்துத்தான் பேசியிருக்கிறார் என்றாலும், பேசியுள்ள கருத்து,வரவேற்கத்தக்கது. விடுதலைப் புலிகள் பற்றி தெளிவான நிலையை அவர்எடுத்திருக்கிறார்.பாராட்டுகிறேன். அவருடைய இந்த அணுகுமுறை தொடர்ந்தால் நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X