அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தே-னி:

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, ரஜினி காந்த் சார்பில் முப்பது லட்சம் செலவில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றுரஜினி காந்த் ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா -கூ-றி-னார்.

ரஜினி காந்த் ரசிகர்மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா,தேனி அருகே உள்ள உத்தமபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

விழாவில் பேசிய ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா ரஜினி காந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் 1997-ம் ஆண்டு முதல்இதுவரை 60 ஜோடிகளுக்கு மக்களின் ஆதரவுடன் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் 20 ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கப்படும். இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

அதே போல் ரஜினி காந்த் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள்வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி , கடந்த ஆண்டு 1999 தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாண்டிச்சேரிக்கு ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 30லட்சரூபாய் செலவில் அரசு பள்ளியில் 1 முதல் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம், பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட-ன.

இந்த ஆண்டில் ப்ளஸ் - 1 , ப்ளஸ் - 2 படிக்கும் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பெஞ்ச், டெஸ்க்குகள் வழங்கப்படும். மேலும், சிலபள்ளிக்களுக்கு குடிநீர் தொட்டிவசதி, போரிங் பைப், பம்பு செட் ஆகிய வசதிகளும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக செய்து கொடுக்கப்படும். மொத்தம்முப்பது லட்சரூபாய் செலவில் இவைகள் செய்யப்படும்.

ரஜினிகாந்த் , தனது பெயருக்கும், புகழுக்கும், செல்வத்துக்கும் முழுகாரணமாக திகழும் தமிழக மக்களுக்காக, தனது வருமானத்தில் ஒரு பகுதியைமக்களின் நலனுக்கு அளிக்கவேண்டியது தனது கடமை என்று கருதி நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். இவ்வாறு சத்யநாராயணா பேசினார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற