For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: பகல் கனவு நல்லதா? கெட்டதா?

ப: நல்லதுதான். நம்பிக்கையுடன் வாழ்வதற்கு வேறு என்னதான் வழி இருக்கிறது?

கே: நாட்டுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளையும், லஞ்சம் வாங்காத அரசுஅதிகாரிகளையும் என்று காணலாம்?

ப: லஞ்சம் கொடுக்க மறுக்கிற மனிதர்களை எந்த அளவுக்கு காண்கிறோமோ - அந்தஅளவுக்கு ஏற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளையும், அமைச்சர்களையும்காணலாம்.

கே: மத மாற்றத்திற்கு வறுமை காரணமல்ல; கீழ் ஜாதியினர் அனைவரையும் மேல்ஜாதியினராக மாற்றி விட்டால், மதமாற்றம் தானகவே மறைந்து விடும் என்றுவி.பி.சிங் பேசியிருப்பது பற்றி ...?

ப: பாதி உண்மை; தாழ்த்தப்பட்ட ஜாதி - வறுமை இரண்டும் சேரும் போதுதான்பெரும்பான்மையான மத மாற்றங்கள் நிகழ்கின்றன.இதில் ஒன்றில்லை என்றால்,மதமாற்றத்திற்கான வாய்ப்பும் குறைவாகத்தான் இருந்து வருகிறது.

கே: டெலிஃபோன் ஊழியர்களுக்கு இலவச டெலிஃபோன் வழங்குவதற்கு தடைவிதித்து, இடைக்கால உத்திரவை கேரள உ.யர் நீதிமன்றம் வழங்கியுள்ளதுபற்றி...?

ப: இது இடைக்கால உத்திரவு மட்டுமே. இறுதித் தீர்ப்பாக இதுவே அமையுமா என்பதுசந்தேகமே. இந்தத் திட்டத்தை ரத்து செய்வது நீதிமன்றம் மூலம் சாதிக்கக் கூடியகாரியமாக எனக்குத் தெரியவில்லை. இது அரசு செய்ய வேண்டிய காரியம்.

கே: கிங் கமிஷன் முன்பு, ஹான்ஸி குரோனியே அளித்துள்ள வாக்குமூலம்எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்தது?

ப: அவர் முன்னுக்குப் பின் முரணாக நிறையப் பேசியிருக்கிறார். அவருடையவாக்குமூலத்தை சல்லடை போட்டு சலித்துத்தான், உண்மையைக் கண்டறிய வேண்டும்.

கே: இத்தனை ஊழல் வழக்குகள் இருந்தும் துணிச்சலுடன் ஜெயலலிதா அரசியல்நடத்துகிறாரே? அதைப் பற்றி என்ன நின்ைகிறீர்கள்?

ப: ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். நெஞ்சுரம் இருக்கிறது.

கே: ராமசாமி படையாச்சி சிலை தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, உங்கள்கருத்து என்ன?

ப: சிலை வைக்கப் போவதில்லை - சிலைகளால் சண்டைகள்தான் வருகின்றன -என்றெல்லாம் பேசிய முதல்வர், இப்போது ராமசாமி படையாச்சி சிலை எழுப்பமுடிவெடுத்து விட்டார். ஓட்டு, அவருடைய நிலைக்கு வேட்டு வைத்து விட்டது.ஆனால் ஒன்று, இப்படியெல்லாம் செயல்பட்டால், பா.ம.க. ஓட்டை தன் பக்கம்இழுக்கலாம் என்ற அவர் கணக்கு பலிக்காது.

கே: மத்தியில் திரும்பவும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ்செல்வாக்கு பெறும் என்று நினைக்கிறீர்களா?

ப: ஏன் நடக்கக் கூடாது? பா.ஜ.க.ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால்,அப்போது காங்கிரஸின் வாய்ப்புகள் கூடும்.

கே: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.ஐ. மேற்கொண்டு வரும்நடவடிக்கைகள் குறித்து...?

ப: ஒரு நாள் கிரிக்கெட் மாதிரி வேகமாக ஆரம்பித்து , ஐந்து நாள் டெஸ்ட் மாதிரி,நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறது. டிரா ஆகிவிடுமோ என்னவோ!

கே: இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிப்பது அரசியலா?சினிமாவா?

ப: தெருவில் போகிற கார், பாதசாரி மீது சேற்றை வாரி இறைப்பது போன்ற பாதிப்பு -சினிமா பாதிப்பு; கார் பாதசாரி மீது மோதி அவர் கால், கையை ஒடிப்பது போன்றபாதிப்பு - அரசியல் பாதிப்பு.

கே: பிறருக்குச் செய்யும் உதவிகளில் எந்த உதவி சிறந்த உதவி?

ப: கடன் கொடுப்பதுதான். திரும்பி வராது. நிரந்தரமான உதவியாக இருக்கும்.

கே: பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸின் இப்போதைய அரசியல் நிலைபற்றி...?

ப: கால் - தி.மு.க. கூட்டணியில்; கை - மத்திய ஆட்சியில்;

கண் - அ.தி.மு.க. கூட்டணி மீது.

கே: மாட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறாரேஅஸாருதீன்?

ப: இன்றைய கிர்க்கெட் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கான அவருடையபேச்சு இது.

கே: இனி அடிக்கடி பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்கிறாரேஜெயலலிதா ...?

ப: இது ஒன்றும் புதிதில்லை. அவ்வப்போது அவர் இப்படி சொல்லியிருக்கிறார்.

கே: அகதிகளால் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பிருக்கிறதா? அதைத் தடுக்கஎன்ன செய்ய வேண்டும்?

ப: நிச்சயமாக பிரச்சனைகள் தோன்றத்தான் செய்யும். அகதிகள் முகாம்கள் சரிவரநிர்வாகிக்கப்படுவதுதான், இதைத் தடுப்பதற்கான வழி.

கே: மாதா, பிதா, குரு, தெய்வம் - என்கிறோம். ஆக பெண்தானே முதற்படிஇல்லையா?

ப: ஆமாம். தெய்வத்திலிருந்து மூன்று இடங்கள் விலகி இருப்பது பெண்தான் - என்றுஇந்தப் பழைய மொழி கூறுகிறது. தெய்வத்திற்கு ரொம்ப நெருக்கம் குரு; இரண்டாவதுஇடம் - பிதா, கடைசியில் மாதா! நியாயமே இல்லை! இதை மாற்ற வேண்டும்.

கே: பெண்களுக்குப் போதிய சீட் ஒதுக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று எம்.எஸ். கில் கூறியுள்ள யோசனை குறித்து என்னநினைக்கிறீர்கள்?

ப: விஷத்தை விஷத்தால் முறிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல்கட்சிகளின் அந்தஸ்தை, பெண் உரிமையினால் முறிக்க வேண்டும் - என்று கில்நினைக்கிறார் போலிருக்கிறது.

கே: துக்ளக் சோ எங்களைத் தாக்கிப் பேசுகிறார். நீங்கள் சிங்களவர்களுக்குக்கைக் கூலியா என்று கேட்பதற்கு எத்தனை நாளாகும்? என்று வைகோகேட்கிறாரே?

ப கேட்கட்டுமே! அப்படியே சோ, அமிர்தலிங்கத்தின் கைக் கூலியா?யோகேஸ்வரனின் கைக்கூலியா? பத்மநாபாவின் கைக் கூலியா? விடுதலை ப்புலிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் கைக்கூலியா?என்றெல்லாம் அவர் கேட்க வேண்டும். அப்போதுதான் அவரவருடைய கேள்விமுழுமை பெறும்.

கே: சந்திரிகா அமைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண இடைக்கால அரசுதிட்டத்தை புலிகள் ஏற்பார்களா?

ப: ஏற்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்றால், அதைக் கெடுக்கும்எண்ணத்தில்தான் ஏற்பார்கள் என்பது என் கருத்து . அவர்கள் நாடுவது - தங்களுக்குஅடிமைப்பட்ட ஒரு பிரதேசம். தேர்தல், ஜனநாயகம் என்பதெல்லாம் அவர்களுக்குசரிப்பட்டு வராது.

கே: கல்வி, வேலை, பணம் - எது மனிதனுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது?

ப: கல்வி, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது; வேலை, பணம்கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது; பணம், வசதியாக வாழ முடியும் என்றநம்பிக்கையைத் தருகிறது - அது தான் தன்னம்பிக்கை; மற்ற நம்பிக்கைகள் வெறும்"ப்ரிலிமினரி நம்பிக்கைகள்.

கே குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், மேல் முறையீடுசெய்தாலும் வேட்பாளராக நிற்க அவரை அனுமதிக்க முடியாது என்று தேர்தல்கமிஷன் எடுத்துள்ள முடிவு குறித்து..,?

ப: நீதிமன்றம் ஒருவருக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கிறது - என்று வைத்துக்கொள்வோம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்... அவர் மேல்முறையீடு செய்து விடுவதால் மட்டும், இந்தத் தகுதி இழப்பு நீங்கி விடாது.

ஆனால், மேல் முறையீடு செய்யும் போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட்டின் தீர்ப்பையே நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம்; அப்படி நடந்தால், அந்தத்தீர்ப்பின் விளைவுகள் அந்தரத்தில் தொங்கும்; அந்த நிலையில் தகுதியின்மையும்நிறுத்தி வைக்கப்படும் - என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒரு பிரபல வக்கீலும்,முன்னாள் அமைச்சருமான முக்கியஸ்தரும் இப்படித்தான் கூறுகிறார்.

கே: "சிங்களவர்களின் பூர்வீகம் ஒரிஸ்ஸா என்று கூறும் இல. கணேசனின் கருத்துபற்றி...?

ப: ஈழம் என்பதே ஈழவர்களைக் கொண்ட கேரளத்தைத் தான் நினைவு படுத்துகிறதேதவிர, தமிழகத்தை அல்ல என்று ஒருவர் கூறுகிறார். "சிங்களவர்கள்ஒரிஸ்ஸாக்காரர்கள் என்கிறார் கணேசன். இது பற்றிய விவரங்கள் எனக்குத்தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X