• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|

பு--லி-கள் விஷ-ய-த்-தில் அடக்-கி வாசித்-த மதி-மு-க மாநா-டு-

கோவை:

ஈரோட்டில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் -நடத்திய தமிழக எழுச்சி மா-நாட்டின் -நாக்கம் -நிறைவேறியது. இந்தமா-நாட்டின் மூலம் வைகோ தன்னைத் தேசியத் தலைவராக உயர்த்திக் கொண்டார்.

மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வைகோ தொடங்கி, 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 7 ஆண்டுகளில் கட்சியின்வளர்ச்சி மற்றும் கொள்கைகளை எடுத்துக் காட்டும் விதத்தில் ம.தி.-மு.க மா-நாடு அமைந்திருந்தது. இந்த மா-நாட்டில் தேசியஜன-நாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் -முக்கிய உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு வைகோவைவாயாரப் புகழ்ந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமை மிக்கது. இதனை உடைக்க எதிர்க் கட்சிகள் தீட்டும் திட்டம் நிறைவேறாது என்பதைஎல்லோரும் வலியுறுத்திப்பேசினர். மா-நாட்டில் பேசிய தலைவர்களும் ச-ரி, ம.தி.-மு.க தொண்டர்களும் ச-ரி, இலங்கைப்பிரச்னையில் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.

முதல் நாள் நடந்த மா-நாட்டில் பேசிய தமிழக -முதல்வர் கருணா-நிதி, ம.தி.-மு.க வின் வளர்ச்சியைக் கண்டு கொஞ்சம் வியந்துபாராட்டிச் சென்றார். "வைகோ வையும் என்னையும் பி-ரித்துப் பார்க்கவில்லை ஒன்றாகத்தான் பார்க்கிறேன் எனக் கூறி,வைகோவை -நகிழச் செய்-தார்.

இந்த மாநாட்டிற்கு வந்த "ஹைடெக் -முதல்வர் சந்திரபாபு -நாயுடு, மத்திய -நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோரும், தேசியஜன-நாயகக் கூட்டணியையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினர். இரண்டாவது -நாள் மாநிாட்டில் பேசிய அனைவரும் இதேகருத்தை வலியுறுத்திப் பேசினர்.

வாஜ்பாய் தலைமையில் இந்தக் கூட்டணி தொடரும் என்பதில் அனைத்துத் தலைவர்களும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தோ, எதிர்க் கட்சிகளை விமர்சனம் செய்தோ யாரும் அதிகமாகப்பேசவில்லை. எதிர்க் கட்சிகளையும் அவர்களது செயல்களையும் கண்டு கொள்ளாமல் நாசூக்காக புறக்கணித்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில், பாட்டாளி மக்கள் ராமதாசைத் தவிர, யாரும் தனி ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.மாநாட்டின் -நிறைவுரையாற்றிய ம.தி.-மு.க பொதுச் செயலர் வைகோ கூட, -நரடியாக "தனி ஈழம் பற்றிப் பேசவில்லை. "இலங்கைதுண்டுபட்டால், அ-தற்கு இந்தியா பொறுப்பல்ல எனக் கூறினார்.

ஆனால் அங்குள்ள தமிழர்கள் படும் கஷ்டங்கள், ஈவு இரக்கமின்றிக் கொல்லப்படும் வன் செயல்களை விமர்சித்து பேசியதுசாதாரண மனிதனிடம் கூட நெகிழ்ச்சியை உண்டாக்கும் விதத்தில் இருந்தது.

மத்திய அமைச்சர் அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையி-லும் அவர் கலந்து கொண்டு பேசியது வைகோவிற்குமகிழ்ச்சியைக் கொடுத்தாலும், எவ்வித அசம்பாவிதம் -நடந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவலையுடன் இருந்தார் வைகோ.

அடுத்து வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பேச்சில் சுவாரஸ்யமே இல்லாமல் போனது. அவரது பேச்சில்வைகோவிற்கு புகழாரம், நாட்டின் -முன்னேற்றம், கார்கில் போர் என ஒரு மணி -நரத்திற்கும் மேலாக பேச்சு நீண்டு கொண்டேஇருந்தது.

ஆனால், இந்தப் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம் எதுவும் இல்லாமல் போனது ஒரு ஏமாற்றத்தையே தோற்றுவித்தது.

மிகப் பெரும் மாநாடு நடத்தி -முடித்த சந்தோஷம் வைகோவிடம், அவரது சகாக்களான மத்திய அமைச்சர் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியா-ரிடம் பரவி இருந்தது. அமைச்சர் அத்வானியின் பேச்சை தமிழில் மொழிபெயர்க்க ம.தி.மு.க அவைத்தலைவர் எல் . கணேசன் திணறிப் போனார். அவருக்கு அவ்வப்போது மேடையில் அமர்ந்தவாறே வைகோ உதவி செய்தார்.

இதனைக் கண்ட அத்வானியே எனக்கு இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் எனக் கூறிப்பிட்டு பேசினார். அப்போது கணேசன்குறிக்கிட்டு "மொழிப் பெயர்ப்பில் தவறான கருத்தை எதுவும் கூறவில்லை எனக்கூறியதும், அத்வானி ஓகே சொன்னார்.

வட மாநிலங்களில் இருந்து வந்திருந்த அனைத்துத் தலைவர்களும் அழகிய தமிழில், இனிய தமிழில் பேச -மு-டியவில்லை எனஆதங்கப்பட்டனர். இதில் சந்திரபாபு -நாயுடு ஒருபடி -முன்னேறி, தமிழில் பேச, தெலுங்கில் எழுதிக் கொண்டு வந்து வாசித்துஅனைவரையும் கவர்ந்தார். அவர் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் -முடித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X