• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|

திமுக - பாமக விரிசல் விரிகிறது

சென்னை:

தமிழக அரசியல் களம், படுபரபரப்பாக இருக்கிறது. இந்த முறை பரபரப்புக்குகாரணமாக இருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸூக்கு , தி.மு.க தலைவர் மீது கோபம் இருக்கிறது என்கிறார்கள்பாட்டாளி மக்கள் கட்சியினர். வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ்கலைஞர் மீது எனக்கு சிறு வருத்தங்கள் இருக்கிறது. இது சரி செய்யக் கூடியது தான்என்று நினைக்கிறேன் என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்த படு தோல்விதான்பிரச்சினை பிறக்கக் காரணம். ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் , தி.மு.ககூட்டணியில் முக்கியமானவர், டெல்லி தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவர்வாழப்பாடி ராமமூர்த்தி. ஜெயித்தால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும்தயாராகவே இருந்தது.

வாழப்பாடியாரும் கூட , தன் கட்சி சார்பாக போட்டியிடும் ஒரே வேட்பாளர், பணம்பலம், தேர்தல் களத்தை சந்திக்க ஆட்கள், ஆளும் கட்சியின் ஆதரவு எல்லாம்இருக்கிறது. கண்டிப்பாக ஜெயிப்போம் என்றே மிக உறுதியாக நம்பினார்.

தேர்தல் முடிந்து எல்லோரும் முடிவுகளுக்காக காத்திருக்க வாழப்பாடி ராமமூர்த்திதோல்வியால் கருணாநிதி , வாஜ்பாய் முதற்கொண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.வாழப்பாடி ராமமூர்த்தி இதை ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக்கொண்டார் . தோல்விஒரு விஷயமே அல்ல அடுத்த வெற்றிக்கு இது தான் அறிகுறி என்பது தான்வாழப்பாடியாரின் எண்ணம்.

தேர்தல் சூடு தனிந்து, கூட்டணிகள் அமைத்து , அமைச்சர்களும் பதவி ஏற்று எல்லாம்முடிந்து மத்தியில் வாஜ் பாய் அரசு ஒரு நிலைக்கு வந்த நேரம். கடந்த மார்ச் மாதம் ,தமிழக தேசிய முன்னணி கூட்டணியில் புயல்வீச ஆரம்பித்தது. சேலத்தில் நான்தோற்றதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான்என்று வெளிப்படையாக கோபத்தைக் கொட்டினார்.

அவர் அருகிலேயே இருந்த இன்னொரு அரசியல் பிரமுகர், பா.ம.க தரப்பிலும்கோபக்கணைகள் பறந்து வர ஆரம்பித்தன வாழப்பாடி ராமமூர்த்திக்கு , வன்னியர்சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு எச்சரிக்கை விடுக்க அதுவும் பரபரப்பைஏற்படுத்தியது.

இருதரப்பிலும் கருத்து வேறுபாடும், பேச்சுக்களும் கடினமாக தமிழக தேசியமுன்னணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் தி.மு.க தலைவர் கருணாநிதியைசமாதானப்படுத்த அழைத்தார்கள். கருணாநிதியும் உங்கள் பிரச்சனைகளைவிசாரிப்போம் என்று களமிறங்கினார்.

அறிவாலயத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.வருவார் என்று பலரும் வாழப்பாடி ராமமூர்த்தியை எதிர்பார்த்திருக்க அவர் சார்பில்கடிதம் மட்டுமே அந்த கூட்டத்திற்கு வந்தது. பத்து நிமிடம் காத்திருந்ததலைவர்களுக்கு வாழப்பாடி ராமமூர்த்தி வராதது ஏமாற்றத்தையே தந்தது.

கடிதத்திலும் கூட , தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு , கூட்டத்திற்கு வர முடியாததற்குவருந்துகிறேன் என்றுதான் இருந்ததாம். பா.ம.க பிரகர் ஒருவர் இப்படிச் சொன்னார்.

இதன் பிறகு,வாழப்பாடி ராமமூர்த்தி, டாக்டர் பிரச்சனை ஒரு சமாதானத்துக்குவரவில்லை என்றாலும், ஒரே கூட்டணியில் இருப்பதால் மிக சைலண்டாகஇருந்தார்கள். அடுத்த சில தினங்களில் நான் தான் வன்னியர் சங்கத்துக்கு தலைவர்என்று ராமதாஸூக்கு எதிராக போட்டி வன்னியர் சங்கம் ஆரம்பித்த ஏ.கேநடராஜனுடன் வாழப்பாடி ராமமூர்த்தி சேர்ந்து , ராமதாஸூக்கு எதிராக குரல் கொடுக்க, கொதிப்பாகிப்போனார் ராமதாஸ். அன்றிலிருந்தே வாழப்பாடி ராமமூர்த்தி,ராமதாஸூக்குமான மோதல் அதிகமானது.

வாழப்பாடியாருக்கு பிடிக்க வில்லை என்பதற்காக லட்சக்கணக்கான வன்னிய மக்கள்ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர் மீது களங்கம் சுமத்த நினைப்பதா? என்றுகொதித்துப்போய் பேசினார் அந்த பிரமுகர். இதற்கு நடுவே, வன்னியர் சங்கத்தின்முன்னாள் தலைவரான ராமசாமி படையாச்சிக்கு சிலை வைக்கவேண்டும் என்றுஆரம்பித்தார் வாழப்பாடியார்.

நாங்களும் 1995- ம் வருடத்திலிருந்து சொல்லிவருகிறோம் என்றார் ராமதாஸ்.வன்னியர் மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்கள் என்கிற ரீதியில் சென்றதுவிவகாரம். வாழப்பாடி ராமமூர்த்தி , ராமதாஸ் மோதல் ஒரு புறம் இருக்க, தமிழகசட்டமன்ற தேர்தலுக்கு தன்னை தயார்படுத்த ஆரம்பித்தன அரசியல் கட்சிகள்.

தி.மு.க கூட்டணி பலமாக இருக்கிறதா என்று கருணாநிதி பார்க்க ஆரம்பித்தார்.இப்பொழுது நம் கூட்டணியில் இருக்கும் ராமதாஸின் விருப்பம் என்ன? என்றுவிசாரிக்க ஆரம்பித்தார். ராமதாஸ் குறைந்தது எண்பது சீட்களையாவதுஎதிர்பார்ப்பார். பேசினால் நாற்பது, ஐம்பது சீட்களுக்கு ஒப்புக்கொள்வார் என்றுதகவல் கிடைக்க, நாற்பது இடங்களா? இதெல்லாம் முடியவே முடியாத காரியம் என்றுநினைத்தாராம்.கருணாநிதி

இந்த தகவலும் ராமதாஸூக்கு கிடைக்க.அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தால்என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். கூட்டணி யாருடன் என்பதை விட , கட்சிமுக்கியம் அதை பலப்படுத்திவிடவேண்டும் என்பதுதான் ராமதாஸின் எண்ணம். சிலநாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் இன்னும் கூட்டணி பற்றி முடிவுசெய்யவில்லை. யார் அதிகமாக சீட் தருகிறார்களோ , அவர்களோடு கூட்டணிவைத்துக்கொள்வோம் என்று கேஷூவலாகச் சொன்னார் ராமதாஸ்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X