தமிழகத்தில் இன்று
பிரான்ஸ் உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பல் கட்ட இந்தியா திட்டம்
பாரீஸ்:
இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்திற்கு உதவி செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளது.
இந்தியா மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு உயர்மட்டக் குழு கடந்த வாரம் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தியது.
10 வருடங்களுக்கு முன் இந்தியா, ஜெர்மனி உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டத் தீர்மானித்திருந்தது. பின்னர் சில பிரச்சனைகளால் ஜெர்மனி இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டது. இதையடுத்து இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக்கப்பல் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. அதாவது கார்கில் போருக்குப் பிறகு தனது பாதுகாப்புத் திட்டங்களை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், இந்திய கடற்படையினர் மீண்டும் நீர்மூழ்கித் திட்டத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பிரான்ஸின் அகஸ்டா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் உலகத் தரம் வாய்ந்தது. அதே போல் சிறந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்புக்கான ஆலோசனையில் இந்தியாவுடன் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது.
ஜெர்மனி கொடுத்திருந்த வடிவமைப்பில் இந்த நீர்மூழ்கிகள் வடிவமைக்கப்படும். நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கும் விதம் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்தபின் இந்தியாவும், பிரான்சும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் அடுத்த ஒரு வருடத்தில் இந்தியா, பிரான்ஸ் உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டும். இந்திய கடற்படை வல்லுநர்கள் இந்த நீர்மூழ்கிக் கப்பலை இரண்டு விதமாகக் கட்டத் தீர்மானித்துள்ளனர்.
ரஷ்ய முறைப்படியும், மேற்கத்திய தொழில்நுட்ப முறைப்படியும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கட்டவிருப்பதாக இந்திய கடற்படை வல்லுநர்கள் விரும்புவதாகத் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!