For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

படிப்பில் வெற்றி கொடி கட்டி வரும் கோவை மாணவி

Nandita dinesh கோவை:

பதினாறே வயதிற்குள், எவ்வளவு கற்றுக் கொள்ளலாம்? அல்லது திறமையைவளர்த்துக் கொள்ளலாம்?

பாட்டு, பரதநாட்டியம், விளையாட்டு, கல்வி, கம்ப்யூட்டர் கல்வி, சமுதாய சேவை ,ஆங்கிலப் புலமை என எல்லாவற்றிலும் சாதனையை நிகழ்த்தி விட முடியுமா என்ன?

கோவையைச் சேர்ந்த சின்னப் பெண் நந்திதா திணேஷ் சாதித்துக் காட்டியிருக்கிறார்.தனது பள்ளி மேற்படிப்பிற்கு ரூ. 13.5 லட்சம் படிப்பு உதவித் தொகையையும் பெற்றுசாதனை படைத்துள்ளார். படிப்பு மட்டுமல்லாது, தொட்டதிலெல்லாம் சாதனைபடைக்கும் பெண்ணாக, "கோப்பைகளை வாங்கி வீட்டில் குவித்து வைத்திருக்கிறார்.

நந்திதா தினேஷ் பெற்றோர்களை பெருமையின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிட்டார். தினேஷ் வி நாயர், லதா தினேஷ் ஆகியோரின் செல்லப் பிள்ளைதான் நந்திதாதினேஷ். இவரின் சகோதரர் நிகில் தினேஷ் திருச்சியில் உள்ள ரீஜினல் இஞ்சினியரிங்கல்லூரியில் இன்ஜினியராக உருவாகி வருகிறார். அவரையும் அமெரிக்கா வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

கோவையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்துமெட்ரிகுலேசன் வரைப் படித்துள்ளார் நந்திதா தினேஷ். மெட்ரிகுலேசன் தேர்வில் 94.27 சதவீதம் பெற்று ஆங்கிலத்தில் 185 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-வதுஇடத்தைப் பிடித்துள்ளார். பள்ளியில் 1100 மதிப்பெண்களுக்கு 1037 மதிப்பெண்கள்பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய நந்திதா தினேஷ்,தற்போது இதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் அரங்கேற்றம் மட்டும் வேண்டாம்என அடம் பிடித்து வருகிறார். ஆனால் இவரது தாயார் நடன அரங்கேற்றத்தில்ஆர்வமாக இருந்து வருகிறார்.

அதோடு கர்நாடக சங்கீதம் வேறு!

எங்கே ஏழைகளைக் கண்டாலும், காரை நிறுத்தச் சொல்லி, அவர்களுக்கு துயர்துடைக்க தன்னால் இயன்றதை வழங்கும் இயல்புடையவள் எனது பெண், எனக்கு கூடதோன்றாத சமுதாய சேவை இவளிடம் இருக்கிறது. சில சமயங்களில் நாங்களே கூடஇந்தப் பெண்ணின் மனப்பக்குவத்தைப் பார்த்து வியந்து போய் உள்ளோம் எனபெருமை பொங்க கூறுகிறார் அவரது தாயார் லதா தினேஷ்.

கோவை இளைஞர் பாட்மின்டன் கிளப் நடத்திய இரட்டையர் ஆட்டத்தில் மாநிலஅளவில் இரண்டாவது இடம். இன்னும் மாவட்ட அளவில் முதலிடம் என அவரதுவீட்டில் உள்ள நூறு கோப்பைகள் அவரது வெற்றியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இத்தனை திறமைகளையும் பார்த்து வியந்து போன மகிந்திரா யுனைடெட் வேர்ல்டுகல்லூரி இவரை நேர்முகத் தேர்விற்கு அழைத்தது. கோவையில் இருந்து தேர்வு பெற்றபெண் இவர் ஒருவர் தான்.

சர்வதேச அளவில் 3 ஆயிரம் பேர் அனுப்பிய விண்ணப்பங்களில், 30 பேரைத் தேர்வுசெய்கிறது புனேயில் உள்ள மகிந்திரா யுனைடெட் வேர்ல்டு கல்லூரி. வெறும்கல்வியை மட்டுமல்லாமல், பல்வேறு திறமையுள்ள மாணவ, மாணவிகளை இந்தக்கல்லூரி தேர்வு செய்து ஸ்காலர்ஷிப் அளிக்கிறது. இதில் 10 பேருக்கு முழு உதவித்தொகை வழங்குகிறது. இந்த 10 பேரில் ஒருவராக நந்திதா தினேஷ் தேர்வுபெற்றுள்ளார்.

இவருக்கு இந்தக் கல்லூரி 13.5 லட்ச ரூபாய் ஸ்காலர்ஷிப் அளிக்கிறது. இதுஇரண்டாண்டு கல்விக்கு மட்டுமே. இந்த இரண்டாண்டு காலத்தில் பல்வேறுநாடுகளிலிருந்து இங்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்தியக்கலாச்சாரத்தை இந்தக் கல்லூரி கற்றுக் கொடுக்கிறது. அதோடு இந்த மாணவ,மாணவிகள் சமுதாய சேவை செய்யவும் வாய்ப்பு தருகிறது. அடுத்த மேல்படிப்பிற்குசர்வதேச அளவில் எந்த பல்கலைக் கழகத்தில் வேண்டுமானாலும், நுழைவுத் தேர்வுஇல்லாமல் இவர் சேர்ந்து படிக்க முடியும்.

இவரது எதிர்கால லட்சியம், கலெக்டராக வேண்டும், கம்ப்யூட்டர் இன்ஜினியராகவேண்டும் என்பதல்ல. ஆனால், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்சில் படிக்கவேண்டும் என்பதே. இந்தப் பள்ளியில் படித்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கைபற்றி யோசிக்கப் போகிறேன் என்கிறார்.

இவரது தந்தை தினேஷ், கோவையில் எல்வின் இன்ஜினியரிங் மற்றும் எல்வின்பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X