தமிழகத்தில் இன்று
தெ.ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: 522 ரன்கள் குவித்தது இலங்கை
கல்லே:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கல்லேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில்இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 522 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கேப்டன் ஜெயசூர்யாவைத் தொடர்ந்து ஜெயவர்த்தனேவும் சதமடித்தார். அடுத்துஆடிய தென் ஆப்பிரிக்கா அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81ரன்கள் எடுத்திருந்தது.
முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்ற நிலையில்,வெள்ளிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்துவிளையாடியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தர்மசேனா அவுட்டானார். அடுத்து வந்தசந்தனாவும் 8 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த வாஸ் நிதானமாகஆடினார்.
அவரும், ஜெயவர்த்தனேவும் நின்று ஆடி 8-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள்குவித்தனர். ஜெயவர்த்தனே 167 ரன்களிலும், வாஸ் 54 ரன்களிலும் அவுட்டானார்.இறுதியில் இலங்கை 522 ரன்களுக்கு அவுட்டானார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் போலக், ஆடம்ஸ் இருவரும் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆட்ட நேரமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.