For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ராஜ்குமார் கடத்தல்: கருணாநிதியை ராஜிநாமா செய்ய சொல்கிறார் ஜெ

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல்வீரப்பன் மறைந்திருக்கும் இடம் கருணாநிதியின் குடும்ப டிவியான சன் டிவிக்குத்தெரியும். அந்த டிவி நிறுவனத்தை முடக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளநாடகத்துக்கு முதல்வர் கருணாநிதி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

வீரப்பினின் இருப்பிடம் சன் டிவிக்கு நன்றாக தெரியும். ஆகவே, அந்த டிவியைமுடக்கி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யவேண்டும். ராஜ்குமார் உள்படகடத்தப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு கர்நாடக முதல்வர் கிருஷ்ணாபதறிப்போய் இருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டிவிவாதித்திருக்கிறார். சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கருணாநிதிக்கு நெருங்கியதொடர்பு உள்ளது.

ஆனால், இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்கு உரியது.எம்.ஜி.ஆர் மீது தமிழக மக்களுக்கு எந்த அளவுக்கு மரியாதையும் பாசம் உள்ளதோஅதே அளவுக்கு ராஜ்குமார் மீது கன்னட மக்களுக்கு பக்தியும் பாசம் அதிகம்.

அத்தகைய பெருமைக்குரிய ராஜ்குமாரை கடத்துகிற அளவுக்கு வீரப்பனுக்கு தைரியம்வந்ததுக்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.

என்னுடைய ஆட்சிக்காலத்தில் வீரப்பனைப் பிடிக்க தனி போலீஸ் படைஅமைக்கப்பட்டது. வால்டர் தேவாரம் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த படையின்நடவடிக்கையால் 150 பேருடன் இருந்த சந்தன வீரப்பனின் பலம் 5 ஆகக் குறைந்தது.

ஆள் பலத்துடன் ஆயுத பலம் குறைந்திருந்த வீரப்பன் இப்போது பெரிய சக்தியாகமாறியதற்கு கருணாநிதிதான் காரணம். சந்தன வீரப்பனை கருணாநிதியின் குடும்படிவியான சன் டிவி பேட்டி எடுத்து தொடராக வெளியிட்டதன் மூலம் வீரப்பனுக்குஇப்போது ஆதரவு பெருகிவிட்டது.

ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதிராஜிநாமா செய்யவேண்டும். ராஜ்குமாரை உடனடியாக மீட்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக 1991-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வசித்ததமிழர்கள் தாக்கப்பட்டனர். அகதிகளாக வந்தவர்களுக்கும், சென்னையில் உள்ளராஜ்குமாரின் வீட்டுக்கும் என் ஆட்சியில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

ராஜ்குமார் பெங்களூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது அவரை போலீஸ்பாதுகாப்புடன் பெங்களூருக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டு வருவதற்கானஏற்பாடுகளைச் செய்தேன். அதற்காக தமிழக அரசுக்கும், போலீஸாருக்கும் அவர்நன்றி தெரிவித்தார்.

அத்தகைய பெருந்தன்மையான ராஜ்குமாரைக் கடத்தும் அளவுக்கு வீரப்பனுக்குத்தைரியம் வந்தது கருணாநிதியால்தான். சந்தனக் கடத்தல் வீரப்பன் இருக்கும் இடம் சன்டிவிக்கு நன்றாகத் தெரியும்.

இரு மாநில போலீஸாரால் தேடப்பட்டு வரும் பயங்கர கொலைக் குற்றவாளியைப்பற்றித் தகவல் தெரிந்திருந்தும் அவனைப் பாதுகாத்து வருகிற சன் டிவியை முடக்கி,அந் நிறுவனத்தினரைக் கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராஜ்குமார் கடத்தப்பட்டத தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். ராஜ்குமார்கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் முதல்வர்கருணாநிதி முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X