ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை.. பட்டுன்னு சொன்ன கார்த்தி சிதம்பரம்!
சென்னை: அதிமுகவில் ஒரு பிரிவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவளித்திருக்கின்றனர். அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறி அவர்கள் நடந்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது பற்றி கூறிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத்தை பொறுத்தவரை எம்எல்ஏக்களை விட கொறடாவுக்கும், கட்சியின் தலைவருக்கும்தான் பவர் அதிகம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் எம்எல்ஏக்கள் ஃபாலோ செய்ய வேண்டும்.

ஆனால், அதிமுக விஷயத்தில் அப்படியே தலைகீழாக நடந்தது. நேற்று விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொண்டார். இதில் அதிமுக எதிராக வாக்களித்தது. தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் அப்படியே வாக்களிக்க கேட்டுக்கொண்டது. ஆனால், சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சியின் தலைமை உத்தரவையும், கொறடாவின் உத்தரவையும் மீறி விஜய்க்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதன் காரணமாக விஜய்க்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்தது.
இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, 25 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு மனு கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் இப்படி இருக்கையில், ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் ஆதரவு அணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளிப்பார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும். அந்த அணி என்னவாக போகிறது என்று தெரியவில்லை. எனவே இவர்களை ஆட்சிக்குள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் இல்லாமலேயே ஆட்சி நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு இருக்கின்றன" என்று பேசியிருக்கிறார்.
ஒருவேளை அதிமுக உள்ளே வருவரை காங்கிரஸ் விரும்பவில்லையோ! அதன் வெளிபாடுதான் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
-
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல்












Click it and Unblock the Notifications