இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 23 கட்சிகள் பங்கேற்றன. ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Vijay TVK Left Out of INDIA Alliance Meeting Here s the Background

விஜய்யின் தவெக பங்கேற்கவில்லை

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியைத் தழுவியது. 59 இடங்கள் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதோடு இனி வரும் தேர்தல்களில் விஜய்யின் தவெகவோடு கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறியது.

இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்த நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தையும் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூட்டத்தை புறக்கணித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்வது என்ன?

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. தவெகவிற்கு இந்தியா கூட்டணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் கூட்டம் வரும் நாட்களில் நடைபெறும் போது தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் கடந்த மாதம் பதவியேற்ற பிறகு முதல் பயணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் யாரையும் சந்திக்காமல் தமிழ்நாடு திரும்பினார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வரும் 11-ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆலோசித்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் முறியடித்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மூலம் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையை பெற முடியும் என பாஜக கருதுவதால் மீண்டும் மசோதாவை தாக்கல் செய்வது பற்றி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "இதுவரை நாம் வெளிப்படுத்தியுள்ள ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி, முன்னேற வேண்டும். மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பல்வேறு சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர் காரணமாக கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+