சென்னையில் 1008 கலசங்களுடன் சனிப் பெயர்ச்சி யாகம்
சென்னை:
சனிப் பெயர்ச்சியை அடுத்து 1008 கலசங்களுடன் சென்னையில் யாகம் நடைபெற்றது.
சென்னை வடபழனி விஜயா சேஷ மகாலில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தயாகத்துக்கு முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத் தலைவர் முருகு ராஜேந்திரன் ஏற்பாடுசய்திருந்தார்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்வதுதான் சனிப் பெயர்ச்சிஎன்று அழைக்கப்படுகிறது. இப்போது மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சனிஇடம்பெயர்கிறார்.
இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக விஜயா சேஷமகாலில் இந்த சிறப்பு யாகத்துக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சனி பகவான் முன்பு 1008 தீர்த்த கலசங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டன.வடபழனி சக்திதாசன் சிவாச்சாரியார் தலைமையில் சுமார் 53 பேர்வேத மந்திரங்கள் ஓத யாகம் நடைபெற்றது.
காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த யாகம் பிற்பகல் வரைநீடித்தது.
விஜயா சேஷமகாலில் நடைபெற்றதைப் போல் நகரின் பல பகுதிகளிலும் சனிபகவானுக்கு விசேஷ பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!