For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலா அமர்நாத் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

கே: மூப்பனாரும் இதர சில சிறு கட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து போட்டியிட்டால்.வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்?

ப: யாருக்கு? இரு கழகங்களுக்கா? அவற்றுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்.

கே: உங்கள் கருத்துக்களை, அப்படியே ஏற்றுக் கொள்பவர்களைப் பற்றி என்னநினைக்கிறீர்கள்?

ப: நல்லவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், என்னால் இந்தப்பத்திரிக்கையை நடத்த முடியாது.

கே: காஷ்மீர் பிரச்சனை தீர அம்மாநில மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே! இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப: ஏற்கவில்லை. அம் மாநில மக்கள் தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் வாக்களிக்ககூடிய நிலை, அம் மாநிலத்தில் இல்லை என்பது நான் முன் வைக்கிற வாதம். காரணம்அல்ல. வாதம்.

கே: விசாரணை கமிஷன் அறிக்கைகளை ஒரு மாநில அரசு ஏற்பதும், ஏற்காததும்அவரவர் விருப்பம் என்று பா.ஜ.க. கூறியுள்ளது பற்றி ...

ப: அதுதான் சட்டம். சட்டம் இப்படி இருப்பதால். தங்களுக்கு தர்ம சங்கடத்தைவிளைவிக்கிற அறிக்கைகளை ஏற்க மறுத்து விடுவது மாநில அரசுகளின் வழக்கமாகஇருந்து வருகிறது. அதுதான் நடைமுறை.

கே: பத்து சதவிகித சத்துள்ள கரும்புக்கு டன்னுக்கு 1000 ரூபாய் எனத் தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் 8.5 சதவிகித சத்துள்ள கரும்புக்கு1000 ரூபாய் என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது பற்றிதங்கள் கருத்து...?

ப: கரும்பு என்ற பெயரில் குச்சிக்குக் கூடவா கூடுதல் விலை கொடுக்க முடியும்? அரசுஉத்தரவில் நியாயம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

கே: தமிழுக்காக, தங்களின் உயிரையும் கொடுக்கத் தயார் என்று தமிழகஅரசியல்வாதிகள் கூறுவதைக் கேட்கும்போது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

ப:உயிர் கிடக்கட்டும்; என்ன இருந்தாலும் போகப் போகிற சமாச்சாரம். சொத்தைக்கொடுக்கத் தயாரா? என்று கேட்க நினைப்பேன்.

கே: ஓர் அரசியல்வாதியும், கிரிக்கெட் வீரரும் சந்தித்துக் கொண்டால் என்னபேசிக் கொள்வார்கள்?

ப: அரசியல்வாதி: இத்தனை வருஷம், கொஞ்சம் கூட சந்தேமே வராத மாதிரி,அப்பாவிகள் போல நடந்துக்க எங்கே கத்தக்கிட்டீங்க? எப்படி அது முடிஞ்சது?

கிரிக்கெட் ஆட்டக்காரர்: அது இருக்கட்டும்.சம்பாதித்ததையெல்லாம் யார்கையிலேயும் மாட்டாத வகையிலே, எங்கே வெக்கறீங்க நீங்கள்ளாம்.? என்ன இடம்அது?

கே: அமைச்சராக இருப்பதை விட, அறிவுள்ளவனாக இருப்பதே மேல் -என்கிறாரே அமைச்சர் அன்பழகன்?

ப:அமைச்சராக இருந்து கொண்டே, அறிவுள்ளவனாக இருக்க முடியாது என்றதீர்மானத்துக்கு வர, அவருக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.

கே: பா.ஜ.க.வுக்கு ஹிந்தித்துவாவும், ஹிந்தியும் மட்டும் தான் தெரியும் என்றுஹர்கிஷன் சிங் சுர்ஜித் கூறியுள்ளது பற்றி...?

ப: ரஷ்ய கலாச்சாரமும், சீன மொழியும் அறியாதவர்கள் பா.ஜ.க.வினர் என்பதால்.சுர்ஜித் அவர்களைச் சாடியிருக்கிறார்.

கே: மாம்பழ சீசன் குற்றால சீசன் - என்பது மாதிரி அரசியல்வாதிகளுககு சீசன்ஏதேனும் உண்டா?

ப: மாம்பழத்துக்கு சீசன் உண்டு. புதருக்கு சீசன் உண்டா? அது எப்போது பரவும்.

கே: பிரதமரின் தலையில் ஏற்கனவே முள் நிரம்பிய கிரீடம் உள்ளது. அதில்மேலும் ஒரு முள்ளைச் சேர்க்க நான் விரும்பவில்லை என்கிறாரே ராம்ஜெத்மலானி இது பற்றி...?

ப: கீரிடத்தில் முள்ளாக இருக்க விரும்பாததால், பிரதமரின் நாற்காலியில் முள் சொருகிவிட்டார். நல்ல எண்ணம்.

கே: மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி? விளக்கவும்.

ப: மீசைக்கும் ஆசை: கூழுக்கும் ஆசை.

கே:வர வர எனக்கு இறை நம்பிக்கை குறைந்து வருகிறது. எங்கே கடவுள்மறுப்பாளன் ஆகி விடுவேனோ என்ற பயம் வருகிறது. இதைத் தவிர்க்க என்னவழி...?

ப: 50 வருடங்களாக, பல தரப்பட்ட அரசியல்வாதிகள் கொள்ளையடித்தும், நாசம்செய்தும் கூட இந்த நாட்டில் இன்னமும் செல்வம் மீதி இருக்கிறதே? இது எப்படி?என்று யோசித்துப் பாருங்கள். கடவுள் செயல்தான் என்று உணர்வீர்கள். நம்பிக்கைவளரும். அவ நம்பிக்கை அழியும்.

கே: பால்தாக்கரேயை கைது செய்ய மஹாராஷ்டிர அரசுக்கு அதிகாரம் இல்லை.இது காலம் கடந்த நடவடிக்கை என்று ராம் ஜெத்மலானி கூறியது சரியாகிவிட்டதே?

ப: இது விஷயமாக சென்ற இதழிலேயே என் கருத்தை கூறியிருக்கிறேன். சட்டத்தில்,சில குற்றங்களுக்கான நடவடிக்க்ைகுக் காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்காலக்கெடுவை கடந்து நடவடிக்கையே எடுக்க முடியாது என்பதல்ல சட்டம்.

குறிப்பிட்ட காலம் கடந்து நடவடிக்கை எடுக்க ப்ராசிக்யூஷன் முயலும் போது,தாமதத்திற்கு தகுந்த காரணம் இருக்கிறதா? அல்லது நீதி நிலைநாட்டப்படுவதற்கு,தாமதம் மன்னிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்விக்களுக்கான பதிலைநீதிமன்றம்தான் அளிக்க வேண்டும்.

இப்போது மஹாராஷ்டிரத்தில், பால் தாக்கரே வழக்கில் மாஜிஸ்ட்ரேட், காலக்கெடுகடந்து எடிக்கப்படுகிற நடவடிக்கை என்பதால். இதை தள்ளுபடி செய்கிறேன் எனக்கூறியிருக்கிறார்.

காலக்கெடு கடந்த நடவடிக்கைக்கு ப்ராசிக்யூஷன் விளக்கம் தர மாஜிஸ்ட்ரேட் வாய்ப்புதரவில்லை. அவராகவே முடிவு செய்து விட்டார். சட்டப்படி இது செல்லுபடியாகுமா?என்பது பற்றி எனக்கு சந்தேகம் இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட்டின் முடிவு ரத்தாகக் கூடும் என்றுதான் நான்நினைக்கிறேன். காலம் தாழ்ந்த நடவடிக்கைக்கு காரணத்தைக் கூறும் வாய்ப்புப்ராசிக்யூஷனுக்கு அளிக்கப்பட்டு, அதன் பிறகு வழக்கை எடுத்துக் கொள்வதாஇல்லையா என்பதை மாஜிஸ்ட்ரேட் முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம்கூறக்கூடும் என்பதே என் கருத்து.

ஆகையால் ராம் ஜெத்மலானியின் கருத்துதான் சரி என்று இப்போதும் என்னால் ஏற்கமுடியவில்லை.

கே: ஹிட்லரின் மறுவாரிசு ராமதாஸ் என்று வாழப்பாடி சொல்கிறாரே?

ப: வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனாரைத் திட்டினார்: பிறகு கருணாநிதியைத்திட்டினார். அதன் பின்னர் ஜெயலலிதாவையும், அதற்கு அடுத்து ராமதாசையும்திட்டினார். திருப்தியில்லை. இப்போது ஹிட்லரை திட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X