கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் கிளிண்டன்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலஸ்:

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அதிகாரப்பூர்வமாக தனது கட்சித் தலைவர்பதவியிலிருந்து திங்கள்கிழமை விடைபெற்றுக் கொண்டார்.

அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் கிளிண்டன், தற்போது தனது கட்சித் தலைவர்பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜனநாயகக் கட்சி சார்பில்நடந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர்கள், அமெரிக்க மக்களுக்கு அவர் நன்றிதெரிவித்துக் கொண்டார்.

கிளிண்டன் பேசுகையில், சாதாரண ஒரு சிறிய நகரிலிருந்து வந்த நான் அமெரிக்காவின்அதிபராகவும், ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் மாறியதை நினைத்துப்பெருமைப்படுகிறேன்.

அமெரிக்காவை வளர்ச்சியில் சிறந்த ஒரு நாடாக மாற்றியதற்காக மகிழ்ச்சிஅடைகிறேன். பொருளாதாரத் துறையில் அமெரிக்கா முன்னேறிய நிலையில் உள்ளது.இதற்கு நான் ஒரு காரணம் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது.

எனக்குப் பின் இந்தப் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளஅல்கோர் (தற்போதைய துணை அதிபர், அதிபர் தேர்தலில் வேட்பாளராக இருப்பவர்)சிறந்த நபர் ஆவார்.

உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கிளிண்டன்.அவர் பேசி முடித்ததும் கூட்டத்திற்கு வந்திருந்த 4338 பிரதிநிதிகளும் எழுந்து நின்றுகைதட்டினர்.

ஐந்து மாதங்களில் ஓய்வு பெறப் போகும் கிளிண்டன் கலந்துகொள்ளும் கடைசிஅரசியல் நிகழ்ச்சி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+