தாயின் பெயரை இனிஷியலாகப் போடுங்கள்...ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒவ்வொருவரும் தங்களது பெயருக்கு முன்னால் தந்தையின் பெயருக்குப் பதில்தாயின் பெயரையே இனிஷியலாகப் போட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த நாளில், பெண்ணுரிமை காத்திடஅனைவரும் வாக்குறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஒவ்வொருவரும் தங்கள்பெயர்களின் முதலெழுத்தாக (இனிஷியல்) தந்தையின் பெயரைப் போடுவதற்குப்பதிலாக தாயின் பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்.
மத்திய, மாநில அரசுகள் தாயின் பெருமையை நினைவு கூறத்தக்கதாக அன்னை தினம்என்று ஒரு நாளை விடுமுறை தினமாக அறிவித்து பெண்களுக்கு கெளவரம் செலுத்திடவேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications