இந்தியாவுடன் உறவு வலுப்படும்... புடின்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் உறவும் மேலும் வலுப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 54 வது சுதந்திர தினத்தை ஒட்டி அவர் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.
புடின் தனது வாழ்த்துச் செய்தியில், விரைவில் இந்தியாவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகிறேன். இது இருநாட்டுஉறவையும் மேம்படுத்தும் வகையில் அமையும்.
இந்த மில்லினியத்தில் எதிர்நோக்கியிருக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகளை இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து எதிர்நோக்கும்என்று கூறியுள்ளார் புடின்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications